‘கைதுசெய்யப்பட்டவர்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டார்களா?” – சபையில் பா.உ. சிறிதரன் கேள்வி
ஜனாதிபதியின் ‘மரணச்சான்றிதழ்’ கூற்றை தமிழ்த் தரப்பினர் நிராகரிப்பு
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச திங்களன்று (செப் 20) பொதுச் செயலாளர் அன்ரோனியோ குத்தேரஸைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன்போது இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி, பொதுச்செயலாளருக்குத் தெரிவித்திருந்தார்.
இவ் விடயம், தமிழ்த் தரப்பினரை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ. சிறிதரன் பாராளுமன்றதில் காட்டமான உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். “எங்களுக்கு மரணச் சான்றிதழ்கள் தேவையில்லை. உரிய முறையில் செய்யப்படும் விசாரணைகளே தேவை” என அவர் தனது உரையின்போது தெரிவித்திருந்தார்.
“2008-2009 காலப்பகுதியில் 4 இலட்சம் பேர் பாதுகாப்பைத் தேடி இடம் பெயர்ந்தார்கள். அப்போது பெற்றோர்கள் தமது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் பாதுகாப்பு கருதி சாட்சியங்களின் முன்னிலையில் இராணுவத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது? இராணுவம் எங்களைக் கொன்றுவிடும், தயவு செய்து எங்களை விட்டுப் போகாதீர்கள் என ஐ.நாவையும், அதன் அமைப்புகளையும் எமது மக்கள் கெஞ்சினார்கள். அப்படியிருந்தும் ஐ.நா. எங்களைக் கைவிட்டுச் சென்றுவிட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.
காணாமாலாக்கப்பாடோரின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா சந்திப்பு
அதே வேளை, ஜநாதிபதியின் அறிவுறுத்தலுக்கு இணங்க, மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா யாழ்ப்பானத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்திநரைச் சந்தித்து உரையாடினார்.