கேரளா இன்னும் ஏன் மோடி மயமாகவில்லை? - ஜோன் ஏப்ரஹாம் -

கேரளா இன்னும் ஏன் மோடி மயமாகவில்லை? – ஜோன் ஏப்ரஹாம்

செப்டம்பர் 27, 2019

கேரளாவைச் சேர்ந்த ஜோன் ஏப்ரஹாம் மாடல், நடிகர், படத் தயாரிப்பாளர், பெரும்பாலும் பாலிவூட்டையே தளமாகக் கொண்டவர்.

சமீபத்தில் ‘The God Who Loved Motorbikes in Mumbai’ என்ற புத்தக வெளியீட்டின் பின்னரான மதிய உணவுச் சடங்கொன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“கேரளா இன்னும் ஏன் மோடி-மயமாக்கப்படவில்லை ( Why Kerala has not been Modi-fied yet?) என்பதே அந்தக் கேள்வி.

அதற்கு அவர் சொன்ன பதில், விருந்தினரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது என்கிறார்கள். பதில் இது தான்.

“அழகான கேரளாவில் ஒரு கோவிலும், ஒரு மசூதியும், ஒரு தேவாலயமும் பத்து மீட்டர் இடைவெளிகளில் இருக்கின்றன. கேரளா இன்னும் மோடி மயப்படாமல் இருப்பதற்கு இதுவே தான் காரணம்”

ஜோன் ஏப்ரஹாம் ஒரு தனித்துவமான, நாட்டுப் பற்றுள்ள தயாரிப்பாளர், நடிகர். அவரது படங்களில் நாட்டுப்பற்று எப்போதும் இழையோடும். ‘மட்றாஸ் கஃபே’, ‘சத்யமேவ ஜயதே’ , சமீபத்தில் வெளிவந்த ‘பாதாள வீடு’ என்று எல்லாப் படங்களிலும் நாட்டுப் பற்று பல தடவைகள் முகம் காட்டுகிறது. இருப்பினும் அவர் அரசியலில் ஈடுபடும் நோக்கம் எதையும் காட்ட எத்தனிக்கவில்லை. அரசியல் கருத்துக்கள் கூறுவதையும் தவிர்த்து வருகிறார். ஆனால் ‘The God Who Loved Motorbikes in Mumbai’ விருந்தில் மட்டும் கேரளா மோடி மயப்படாமை பற்றிக் கூறியிருப்பது பலருக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது.

அழகான கேரளாவில் ஒரு கோவிலும், ஒரு மசூதியும், ஒரு தேவாலயமும் பத்து மீட்டர் இடைவெளிகளில் இருக்கின்றன. கேரளா இன்னும் மோடி மயப்படாமல் இருப்பதற்கு இதுவே தான் காரணம்

ஜோன் ஏப்ரகாம், நடிகர்

“முழு உலகமும் துருவப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் மதங்களும் சமூகங்களும் எப்படி இசைவோடு வாழலாம் என்பதற்கு கேரளா உதாரணமாகத் திகழ்கிறது” என அவர் பேசும்போது தெரிவித்தார்.

2019 பொதுத் தேர்தல்களின் போது நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி கேரளாவில் ஒரு ஆசனத்தைக் கூட வெற்றிபெறவில்லை. 20 ஆசனங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 19 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. பாரதீய ஜனதா கட்சி கேரளாவில் ஒரு போதுமே ஆட்சி அமைத்ததில்லை.

கேரளாவுக்கு இன்னுமொரு தீவிர பக்கமும் இருக்கிறது. அது ஒரு கம்யூனிஸ்ட் மாநிலம். ஃபிடெல் காஸ்ட்றோ காலமானபோது நான் கேரளாவுக்குச் சென்றிருந்தேன். கேரளாவில் மட்டுமே அவருக்கு போஸ்டர்கள் அடித்து மாநிலமெங்கும் ஒட்டி அவரது மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்திருந்தார்கள். அந்த விடயத்தில் கேரளா நிச்சயமாக ஒரு கம்யூனிஸ்ட் மானிலம் தான். எனது தந்தையார் என்னை ஒரு மார்க்சிஸ்ட் நூலை வாசிக்கத் தூண்டினார். பல மலையாளிகளில் இந்த கம்யூனிஸ்ட் பக்கம் இருக்கிறது. நாங்கள் எல்லோரும் சமத்துவமான வாழ்வையும், எல்லோரும் சமமாகச் செல்வத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதையும் விரும்புபவர்கள். கேரளா அந்த விடயத்தில் ஒரு உதாரணம்” என்றார் அவர்.

முரளி கே.மேனன் அவர்களின் ‘The God Who Loved Motorbikes’ என்ற நூலை வெளியிடுவதற்காக ஜோன் ஏப்ரஹாம் மும்பாய் வந்திருந்தார்.

Please follow and like us:
error0