கேரளாவில் கடும் மழை | 22 பேர் மரணம்! -

கேரளாவில் கடும் மழை | 22 பேர் மரணம்!

Spread the love
கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் விடா மழையினால் கேரளா மாநிலம் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இதுவரையில் 22 பேர் மரணமடைந்திருக்கின்றனர். ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொச்சி கடற்படையின் விமானத்தளம் பொதுப் பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. 22,500 பேர் 330 தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்யுமெனவும் எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு, மாலப்புரம், கோழிக்காடு, வயநாடு, கண்ணூர், கேசரகோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலைத் திணைக்களம் சிவப்பு அபாய அறிக்கையை விடுத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவரும், வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஹுல் காந்திபாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று உதவிகளை வழங்குமாறு கட்சித் தொண்டர்களைப் பணித்திருக்கிறார். அத்தோடு அவர் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து கேரளாவின் வெள்ள நிவாரணத்திற்கு தேவையான உதவிகளைச் செய்யும்படியும் கேட்டிருக்கிறார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  டிஜிட்டல் இந்தியாவில் பொது இடங்களில் சலம் கழிப்பவர்களுக்கு அரசு வழங்கும் 'யுக்திமதி'!