Technology & Science

கூகிள் பிக்செல் ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி!

திடீர் அழைப்புமணி இனி அதிர்ச்சியை ஏற்படுத்தாது

நவம்பர் 8, 2019

Google Pixel
கூகிள் பிக்செல்

நீங்கள் கூகிள் பிக்சல் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவரா? அது எந்தவித முன்னெச்சரிக்கையுமில்லாமல் அழைப்பு மணியை அடித்துத் தொலைத்து உங்களை எரிச்சல் படுத்துவதுண்டா?

கவலை வேண்டாம். இனி நீங்கள் திட்டித் தீர்க்கவோ அல்லது பதை பதைத்து ஃபோனை ஓஃப் பண்ணவோ தேவையில்லை. பிக்செல் தயாரிப்பாளருக்கு உங்கள் திட்டலும் எரிச்சலும் போய்ச் சேர்ந்துவிட்டது.

இனிமேல் கூகிள் ஃபோனின் அழைப்பு மணி ஒலிப்பதற்கு முன் ஐந்து செக்கண்டுகளுக்கு அதிர்ந்து உங்களுக்கு எச்சரிக்கை தரும். அது மட்டுமல்ல. அழைப்பு மணியின் சத்தம் கூட மிகவும் மெதுவாக ஆரம்பித்துப் பின்னர் அதிகரித்துக்கொண்டே போகும்.

இதுவரையில் கூகிள் ஃபோன் பாவனையாளருக்கு இரண்டு தேர்வுகளே இருந்தன – அதிர்வதா / இல்லையா. அவ்வளவுதான். தற்போது மூன்றாவது தேர்வும் உண்டு. அழைப்பு வரும்போது முதலில் அதிர்வுடன் ஆரம்பித்து படிப்படியாக மணி ஒலிக்கு மாறிச் சத்தம் அதிகரித்துச் செல்வது.

இந்தத் தேர்வை நீங்கள் ஃபோன் செற்றிங்க்ஸ் இற்குச் சென்று உப பிரிவில் சவுண்ட் செற்றிங்க்ஸ் இல் இதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.