குவெய்த்திலிருந்து 60 பணிப்பெண்களை சிறீலங்கா திருப்பி அழைத்தது! -

குவெய்த்திலிருந்து 60 பணிப்பெண்களை சிறீலங்கா திருப்பி அழைத்தது!

Spread the love

22 August 2019

குவெயித் நாட்டில் வீடுகளில் வேலை செய்யவெனச் சென்ற 60 பெண்களை சிறீலங்கா மீள அழைத்துக் கொண்டது. பணி செய்த வீடுகளில் இவர்கள் பலவிதமான துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்பதனாலேயே அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டார்கள். சிறீலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் (Srilanka Bereau of Foreign Employment (SLBFE)) இவர்களைத் திருப்பி அழைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. இவர்கள் அனைவரும் இன்று காலை 6:15 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

இவர்களில் 45 பேர் சுறக்‌ஷா தடுப்பு நிலையத்திலும் 15 பேற் குவெய்த் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டும் இருந்தனர்.

குவெயித்திலிருந்து திருப்பி அழைக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண்கள்

மேலும் 173 பணிப்பெண்கள் சிறீலங்கா திரும்புவதற்காக குவெயித்திலுள்ள சிறீலங்கா தூதுவராலயத்தில் தங்கியுள்ளனர். இவர்களில் பலருக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை எனவும் அடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள் எனவும் கூறினர்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  பயணத் தடைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுப் பதிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *