குளோறோகுயீன் மருந்தை உட்கொண்டவர் மரணம்!

Spread the love
டொனால்ட் ட்றம்ப், இலான் மஸ்க் ஆகியோர் இம் மருந்தின் பாவனையை ஆதரித்திருந்தார்கள்

குளோறோகுயீன் பொஸ்ஃபேட் என்னும் மருந்தை உட்கொண்டதால் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மரணமானார். அவரது மனைவி மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மலேரியா மற்றும் மூட்டு வாதம் போன்ற் நோய்களுக்காகப் பாவிக்கப்பட்டு வரும் ஒரு மருந்து என அறியப்பட்ட ஒன்று.

இம் மருந்து கோவிட்-19 வரஸ் நோயைக் குணப்படுத்துமெனெ அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் மற்றும் ரெஸ்லா நிறுவனத்தின் அதிபர் இலான் மஸ்க் ஆகியோர் சமீபத்தில் கூறியிருந்தனர். ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளின்படி குளோறோகுயீன் பொஸ்ஃபேட் கொரோனாவைரஸ் பரவலைத் தடுக்க வல்லது என்ற செய்தி சில ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.

“எழுந்துள்ள அவசர நிலைமையில் பொதுமக்கள் தமக்குக் கிடைக்கும் வழிகளைப் பாவிப்பது புரிந்துகொள்ளக்கூடியது. இருப்பினும் சுய மருத்துவம் செய்துகொள்வது மிகவும் ஆபத்தானது” என பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சிகிச்சையளித்துவரும் ‘பானர் ஹெல்த்’ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் டானியல் புரூக்ஸ் தெரிவித்தார்.

வயதில் 60பதுகளிலிருக்கும், பாதிக்கப்பட்ட இருவரும் இம் மருந்தை உட்கொண்டு 30 நிமிடங்களில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால் இருவருமே கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் பானர் ஹெல்த் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.



அமெரிக்காவிலுள்ள சில மருத்துவமனைகளில் சில நோயாளிகளுக்கு குளோறோகுயீன் (chloroquine) அல்லது அதன் இன்னுமொரு வடிவமான ஹைட்றொக்சிகுளோறோகுயீன் (hydroxychloroquine) மருந்துகளை, இரக்கத்தின் காரணமாக் அல்லது பரீட்சார்த்த ரீதியாகக் கொடுத்துவருவது உண்மை என நோய்த்தடுப்பு மையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

பல நாடுகளில் கோவிட்-19 நோயாளிகளில் இம் மருந்து பாவிக்கப்பட்டு வருகிறதெனினும் முறைப்படி மனிதரில் எழுந்தமான பரிசோதனைகள் (Randomized Clinical Trials (RCTs) ) செய்யப்பட்டு அதன் மூலம் பெறப்பட்ட தரவுகளைச் சார்ந்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்வில்லை என்பதை நோய்த்தடுப்பு மையம் ஒத்துக்கொண்டுள்ளது.

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத நோயாளிகளுக்கு, இம் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாமென மருத்துவ சமூகத்தை நாம் கேட்டுக்கொண்டுள்ளோம்” என டாக்டர் புரூக்ஸ் தெரிவித்தார். (லைவ்சயன்ஸ்)


Print Friendly, PDF & Email
Related:  ரொறோண்டோவின் முதலாவது கொறோனாவைரஸ் மரணம்

Leave a Reply

>/center>