குறைந்த எதிர்ப்புடன் தீர்மானம் நிறைவேறியமை மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை முன்னெடுக்க உதவும் – உலகத் தமிழர் பேரவை
மார்ச் 23ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையில், அதிக எதிர்ப்புகளின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை, அங்கு மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க ஊக்கம் தருவதாக இருக்கிறது என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இத் தீர்மானம் தொடர்பாக, மார்ச் 23, 2021 அன்று பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் திரு சுரேன் சுரேந்திரன் அவர்களால் ஊடகங்களுக்கு விடப்பட்ட அறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு:
“மனித உரிமைகள் சபையினால் நிறைவேற்றப்பட தீர்மானம் 46/1 ஐ, உலகத் தமிழர் பேரவை முழுமனதோடு வரவேற்கிறது. பெரும்பாலான அயல் நாடுகள் உடன்படாமலிருந்தபோதும், இலங்கை இத் தீர்மானத்தை நிராகரித்திருக்கிறது.
பெரும்பாலான இலத்தின் அமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இத் தீர்மானத்தை ஆதரித்திருப்பது முக்கியமான விடயமாகும். பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளும், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பும் கூட இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை.
உலகின் பல பாகங்களிலுமிருத்தும் வாக்களித்த நாடுகள் பல, வழமையாக எதிராகாவே வாக்களித்து வருவன. இந்தத் தடவை அவற்றில் பல இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையும்., பல நடுநிலைமை வகித்தமையும், இலங்கையில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளன என்பதையே காட்டுகிறது. நீதி கிடைப்பதில் தடைகளும், சிரமங்களும் ஏற்பட்டாலும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்படுபவர்களுக்காக ஐ.நா.மனித உரிமைகள் சபை தொடர்ந்த்தும் பாடுபட்டு வருவது உற்சாகமளிக்கிறது.
இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை 2012 இல் ஆரம்பித்து வைத்தமைக்காகத் தமிழர்கள் அமெரிக்க நிர்வாகத்துக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள். அதே போல தமிழரின் அபிலாட்சைகளான நீதி, சமத்துவம், தன்மானம், சமாதானம் ஆகியவற்றை முன்னெடுக்கும் தமிழர் போராட்டத்தை ஆதரிக்கும் இந்திய அரசுக்கும் தமிழர்கள் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார்கள். 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழஅதிகாரப் பகிர்வை இலங்கை வழங்கவேண்டுமென்பதற்காக, இந்தியா சர்வதேச சமூகத்துக்கு ஆதரவு தருகிறது எனக் குறிப்பிட்ட விடயம் மிகவும் முக்கியமானது.
இவ்விடயம் தொடர்பாகத் தொடர்ச்சியான ஆதரவை நல்கிவரும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கும், குறிப்பாக இத் தீர்மான வாக்கெடுப்பின்போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்திய தி.மு.க. தலைவர் திரு.எம்.கே.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழர்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள்.
இத் தீர்மானம் நிறைவேற உழைத்த, மனித உரிமை ஆணையாள அலுவலகம், இணைத்தலைமை நாடுகள், இத் தீர்மானத்தை முன்மொழிந்த, ஆதரவளித்த அனைத்து நாடுகள், தீர்மானத்துக்கு ஆதரவளிக்காமல் நடுநிலைமை வகித்த நாடுகள், சான்றோர், அர்ப்பணிப்போடு செயற்பட்ட மனித உரிமை அமைப்புக்கள், சகல முற்போக்கு சக்திகள், மிகவும் முக்கியமாக, இலங்கையில் இருந்துகொண்டு உயிரச்சுறுத்தல்களையும் பாராது மனித உரிமைகளுக்காகப் போராடிவரும் பாதிப்புற்ற மக்கள் ஆகியோருக்கு உலகத் தமிழர் பேரவை தன் ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது”. என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
உலகத் தமிழர் பேரவையின் முழுமையான ஆங்கில அறிக்கையைத் தரவிறக்கிப் பார்வையிடப் பின்வரும் தொடுப்பை அழுத்தவும்:
Related posts:
- இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்தை வரவேற்கிறோம் – உலகத் தமிழர் பேரவை
- “மூலோபாய ரீதியாகவும் ஒற்றுமையாகவும் செயற்படுவதே இத் தருணத்தில் அவசியமானது”- போரின் முடிவின் 12 வது ஆண்டு நிறைவு பற்றி உலகத் தமிழர் பேரவை அறிக்கை
- துறைமுக நகர சட்டவரைவு – பாராளுமன்ற வாக்களிப்பைத் தள்ளிப்போடும்படி மதத்தலைவர்கள் வற்புறுத்தல்
- நமோ நமோ சீனா…