Health

‘குடில்’ | மனவளம் நலிவுற்றோருக்கான புனர்வாழ்வு இல்லத்தின் அடிக்கல்நாட்டு வைபவம் தெல்லிப்பழையில் நடைபெற்றது

வடமாகாணத்தில் மனவளப் பாதிப்புற்றோர் புனர்வாழ்வு பெறுவதற்கான பராமரிப்பு நிலையமொன்று அமெரிக்காவிலுள்ள அனைத்துலக மருத்துவ நல அமைப்பினால் (IMHO USA) தெல்லிப்பளையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு வைபவம் இன்று, ஜூலை 4, தெல்லிப்பழையில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே பார்க்கலாம்.

சுமார் 400,000 அமெரிக்க டாலர்கள் செலவில் அமையவிருக்கும், ‘குடில்’ என்ற அழகான தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந் நிலையத்தை அமைப்பதற்கான முழுச் செலவையும் பெயர் குறிப்பிடப்பட விரும்பாத ஒரு தமிழ்க் குடும்பம் ஏற்றுள்ளது. இறந்த தமது தாயாரின் நினைவாக இந்த அன்பளிப்பை அவர்கள் செய்ய முன்வந்துள்ளார்கள்.

image.png
image.png
image.png