குடிநீரிலிருந்து நுண்நெகிழியை (Microplastic) அகற்றல்
மூன்று இந்திய மாணவர்களுக்கு உலகளாவிய பரிசு
நாம் தினமும் அருந்தும் தண்ணீரில் எம் கண்களுக்குத் தெரியாமல் மறைந்துறங்கும் நெகிழித் துகள்களை (micro plastics) மின்சார சாதனங்களின்றி அகற்றும் வழியொன்றை 16 வயதுடைய மூன்று இந்திய மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கண்டுபிடிப்பிற்காக 2026 ஆம் ஆண்டிற்கான The Earth Prize பரிசை அவர்கள் பெற்ருள்ளார்கள். விவான் செளச்சாரியா, அரியானா அகர்வால், அவ்யானா மேத்தா ஆகிய மூவருமே இந்த இளையோராவார்.
நுண் நெகிழி (Micro Plastic)
செயற்கையாக நெகிழியை உருவாக்கும் நடைம்முறை 1862 இல் அறிமுகப்படுத்தப்பட்டது எனினும் 1870 இல் தான் அதன் பாவனை வர்த்தகரீதியாகப் பிரபலமானது. 1920 களிலிருந்து பொலிஸ்ரைறீன், பி.வி.சீ. மற்றும் நைலோன் போன்ற நெகிழிகள் பரவலாக உபயோகத்துக்கு வந்தன. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட உலோக மற்றும் மனிதவளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய இந்நெகிழிகள் பெரிதும் உதவின. இலகுவாகவும், மலிவாகவும் தயாரிக்கப்பட்ட நெகிழிகள் சமையலறகளையும் மருத்துவ மனைகளையும் ஆக்கிரமித்தன. போருக்குப் பின்னான பொருளாதாரத்தை விரைவாகக் கட்டியெழுப்பும் அவசரத்தில் இவற்றால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகள் கண்டுகொள்ளப்படவில்லை.
நாம் உட்கொள்ளும் உணவு, அருந்தும் பதார்த்தங்கள் மூலம் நம் உடலுக்குள் நெகிழித் துகள்கள் செல்கின்றன என்பது முதன் முதலில் அக்டோபர் 2018 இல் தான் தெரியவந்தது. வியென்னா மருத்துவ பல்கலைக்க்கழகம் மற்றும் மத்திய சூழல் நிர்வாகம் இணைந்து மேற்கொண்ட பரிசோதனையின்போது சரவதேசங்களிலுமிருந்தும் பங்கு பற்றிய மனிதர்களின் மலக்கழிவுகளை ஆராய்ந்தபோது அனவைரது கழிவுகளிலும் (100%) நெகிழித் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நுண் நெகிழிகளால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்
1 நனோ மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரையிலான அளவுள்ள நெகிழித் துகழ்களை மைக்கிரோ பிளாஸ்டிக்ஸ் என வரையறுக்கிறார்கள். நாம் உண்ணும் உணவு, குடிக்கும் பதார்த்தங்கள், சுவாசிக்கும் காற்று மற்றும் சருமத்திலுள்ள துளைகள் மூலம் இந்நெகிழித் துகள்கள் மனித் உடலுக்குள் சென்றடைகின்றன. உள்ளே சென்ற இத்துகள்கள் இரத்தக்குழாய்களின் உட்சுவர்களில் ஒட்டிக்கொள்ளும்போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் (stroke) ஆகிய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதே போள், குடலின் உட்சுவர்களில் இவை தேக்கமடையும்போது வயிற்றில் அழற்சி (gut inflammation) ஏற்படுவதால் அங்கு பிறப்பு முதல் எம்மோடு இசைவாக வாழ்ந்து எமது உடலின் ஆரோக்கியத்தைப் பேணிவரும் நுண்ணுயிரிகளை இவை அழித்துவிடுகின்றன. மிகவும் சிறிய அளவிலான (nano plastics) நெகிழித் துணிக்கைகள் மூளையின் பாதுகாப்பு சுவர்களையும் இலகுவாக துளைத்துக்கோண்டு மூளைக்குள் சென்று நரம்புத் தொகுதியின் செயற்பாடுகளையும் பாதிக்கிறது. அது மட்டுமல்லாது ஆண்களில் விந்து உருவாக்கத்தையும் அதன் வீரியத்தையும் பாதிக்கத்தக்க வகையில் ஹோர்மோன்களில் மாற்றங்களையும் கொண்டுவருகின்றது. அத்தோடு உடலின் சக்தி பிறப்பாக்கத்திற்குக் காரணமான மைற்ரோகொண்ட்றியாவையும் (mitochondria) பாதிப்பதால் உடற்சோர்வு ஏற்படவும் காரணமாகிறது.
இளையோரின் ஆராய்ச்சி
இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் இலாபம் மற்றும் இலகு காரணணங்களிற்காக தண்ணீர் தொட்டிகள், வழங்கு குழாய்கள், பானைகள், கிண்ணங்கள் என அனைத்தும் நெகிழிகளில் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. இதனால் கிராம வாசிகளின் ஆரோக்கியம் வெகுவாகப் பாதிப்படைகிறது. நகரங்களில் விலையுயர்ந்த வடிகட்டி வசதிகள் இருப்பதால் ஒப்பீட்டளவில் கிராமவ்சாசிகள் அதிகம் பாதிப்புள்ளாகிறார்கள் என்பதை அறிந்த இம்மூன்று இளையவர்களும் எடுத்த முயற்சியின் விளைஇக் கண்டுபிடிப்பு.
புளியம் விதைகளின் பண்பு
இந்திய சமையலில் புளியின் பாவனை மிகவும் நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இதன் போது கழிவாக வீசப்படும் புளியம் விதைகளை அரைத்து கஞ்சியாகவோ அல்லது ஒட்டுப் பசைகளகவோ அல்லது உடற்சருமத்தின் அழகு நிர்வாகத்திற்கோ புளியம் விதையைப் பாவிக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்துவருகிறது. இப்பசையை நீருக்குள் அமிழ்த்தும்போது அது வெறுமனே கரைந்து போகாமல் தனக்கு அருகிலுள்ள நெகிழித் துகள்களுடன் ஒட்டிக்கொள்வதன் மூலம் நீரில் மிதந்துகொண்டிருக்கும் துகள்கள் ஒன்றிணைக்கப்பட்டு பாரிய கழிப் பதார்த்தமாக திரைய நேறிடுகிறது. திரைந்த இக்கட்டிகளை அகற்றுவதற்கு இவ்விளையோர் பாவித்த ஒரு நடைமுறை புளியம் விதைக்கழியுடன் இரும்புத் துகள்களைக் கலந்துவிட்டால் ஒன்றிணையும் கழிக்கட்டிகளை காந்தம் மூலம் பிரிதெடுத்து விடலாம் என்பதே.
இவ்விளையோர் தமது கண்டுபிடிப்பிற்கு Plas-Stick என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவரை அவர்கள் தமது கண்டுபிடிப்பை குறைந்தது 8,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு செயல்குறையாகக் காட்டியுள்ளார்கள்.அதன் விளைவாக The Earth Prize 2026 என்னும் நிர்வாகம் இவ்வருடத்திற்கான தனது பரிசை இவ்விளையோருக்கு அளித்துக் கெளரவித்திருக்கிறது.
