கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவியிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ. லதாகரன் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை, கல்முனை, நிந்தாவூர், பொத்துவில், திருகோணமலை ஆகிய பகுதிகளில் தொற்று உறுதிசெய்யப்பட்ட பல நோயாளிகள் பேலியகொட மீன்சந்தை வர்த்தகர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனையில் 11 பேரும், திருகோணமலையில் 6 பேரும் இதுவரை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளனர் எனவும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் டாக்டர் லதாகரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் விளையாட்டு மற்றும் பொது நிகழ்வுகள் நடைபெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. சில பகுதிகளில், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள் மூடப்பட்டுள்ளன.