“Fun Reading Bee” என்னும் பெயரில் கிளிநொச்சி பிரதேச ஆங்கிலக் கல்வி ஆதரவு மையத்தினூடாக இலவச ஆங்கிலக் கல்வித் திட்டமொன்று ஆகஸ்ட் 2 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
3,4,5 ஆம் தர மாணவர்களிடையே ஆங்கில வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக மருத்துவநல அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பிரதேச கல்விப் பணிப்பாளர், ஆங்கிலக் கல்விக்கான உதவிப் பணிப்பாளர், சேவை ஆலோசகர்கள், 10 பாடசாலை அதிபர்கள், மற்றும் ஆசிரியர்களுடன் அனைத்துலக மருத்துவநல அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் எஸ்.கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த ஆரம்ப அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஆங்கிலக் கல்வியை இலகுவாகவும் வேடிக்கை கலந்ததாகவும் வழங்குவதன் மூலம் வாசிப்பு பழக்கத்தில் மாணவர்களை விருப்புடன் ஈடுபடவைக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த “Fun Reading Bee” கற்கை நெறி.
இக் கற்கைநெறியை ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் நிகழ்வு, வவுனியாவிலுள்ளPICTET நிலையத்தில் அதன் கற்கைவளக் குழுவினால் ஆகஸ்ட் 2 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அனைத்துலக மருத்துவநல அமைப்பின் இத் திட்டங்களுக்கு உதவி வழங்க விரும்புவோர் பின்வரும் தொடுப்பை அழுத்தவும்.