அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள்
“உதுறு வசந்தயா திட்டத்திந் கீழ் கிளிநொச்சியில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையமொன்று யூ.ஜீ.ஈ.ஹன்சமல்லி என்பவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த ஹன்சமல்லி அல்ல இவர்” எந மட்டக்களப்பு பா.உ. சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருள், சக்தி அமைச்சர் உதய கம்மந்பில மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தின்போது சாணக்கியன் மேற்படி விடயத்தைத் தெரிவித்தார்.
‘உதய வசந்தயா’, ‘நாகநஹிர வசந்தயா’ திட்டங்களின்கீழ் எண்ணற்ற ஊழல்கள் அரங்கேறி வருகின்றன எனவும் இவற்றில் அமைச்சர்கள் பலர் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“‘நாகநஹிர வசந்தயா’ திட்டத்தின் கீழ் பிள்ளையான் ஒரு நிலத்தைப் பெற்றுக்கொடுத்தார். அதன் மூலம் அவருக்குப் பல பில்லியன்கள் கிடைத்திருக்கிறது. ‘றேட் லங்கா'( Trade Lanka) என்றொரு நிறுவனம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. “Trade Lanka Pvt. Ltd.’ என்ற நிறுவனத்தின் கீழ் இறக்குமதி செய்பவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.