News & AnalysisSri Lanka

கிறிஸ்தவ மதபிரசாரகரைத் சுமணரத்தன தேரோ!

மட்டக்களைப்பைச் சேர்ந்த பிரச்சினைக்குரிய புத்த் பிக்கு அம்பிட்டிய சுமணரத்தன தேரோ ஒரு கிறிஸ்தவ மதபிரசாரகரைப் பொது மக்களின் முன்னால் தாக்கியமை பற்றிய காணொளி உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.

பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமொன்றில் மதபிரசாரம் செய்தாரெனக் குற்றஞ்சாட்டி மேற்குறிப்பிட்ட பிக்கு தாக்கியதாகவும் அத்தோடு ‘மத பிரசாரம்’ செய்தவரைக் கைதுசெய்யவில்லை எனக் காவற்துறை அதிகாரிகளையும் அப் பிக்கு ஏசியதாகவும் தெரியவருகிறது.

மதபிரசாரம் செய்தவரெனக் கருதப்படுபவர் தான் என்ன செய்தேன் எனப் பிக்குவிற்கு விளக்கமுற்படும்போது பிக்கு அவரது கன்னத்தில் அறைவதும் அவரத் மூக்குக் கண்ணாடி இதனால் வீசப்படுவதும் காணொளியில் பார்க்கமுடிகிறது.

அதே வேளை இன்னுமொரு காணொளியில், அவ்விடத்துக்கு மோட்டர் சைக்கிளில் வந்த கிறிஸ்தவ போதகர் ஒருவரது வண்டியையும் நிறுத்தி அவர் ஹெல்மெட் அணியாதது பற்றியும் மக்கள், காவற்துறை அதிகாரிகளின் முன் அவரையும் கண்டபடி ஏசுவதையும் காணமுடிகிறது.

இப் பிக்குவின் அட்டகாசம் இதுதான் முதல் தடவையல்ல. அப் பிரதேசத்திலுள்ள பிற மதத்தினரை அவதூறு செய்வதும், தாக்குவதும் பிரசித்தமான விடயங்கள். ஒரு தடவை அவர் இலங்கை மின்சாரசபை ஊழியர்களையும், பிறிதொரு தடவை கிராம சேவகரையும் அச்சுறுத்தியிருந்தார். இருப்பினும் அவர் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.