கிரிக்கெட் | யாழ். மத்திய கல்லூரி காலி வித்யாலோக மோதுகின்றன

19 வயதுக்குக் கீழ், மூன்றாம் பிரிவு A (Under 19 Division III Tier ‘A’ Cricket)

விளையாட்டு:



இலங்கைப் பாடசாலைகளுக்கிடையேயான 19 வயதுக்குக் கீழ் மூன்றாம் பிரிவு A நிலைக்கான போட்டியில் நாடு தழுவிய ரீதியில் இதுவரை தோற்கடிக்கப்படாத யாழ். மத்திய கல்லூரியும், காலி வித்யாலோக கல்லூரியும் மோதவுள்ளன.

நாளந்தா கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் சனியன்று இப் போட்டி நடக்கவுள்ளது.

யாழ் மத்திய கல்லூரியின் அணியின் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுத்தந்த அதன் துடுப்பாட்ட வீரரான எஸ்.சாரங்கன் மீது இந்தத் தடவையும் அணி பெரும் நம்பிக்கையை வைத்திருக்கிறது. சுற்ர்றுப் போட்டியின் இறுதி ஆட்டங்களின்போது அவர் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும், அரை செஞ்சரி ஓட்டக் குவிப்புடன் சில விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். ஜே.விதுஷன், வீ.விஜயஸ்காந்த் ஆகியோரும் அணியின் வெற்றிக்குப் பெரிய உதவியாக இருந்தார்கள்.

பந்து வீச்சில், ஆர்.நியூட்டன், வீ.விஜய்ஸ்காந்த், என்.அஜே, ரி.கெளதம் மற்றும் இந்துஜன் ஆகியோர் கணிசமான பங்களிப்பைச் செய்திருந்தனர்.

வித்யாலோக அணியில் உமாங்க இமாஞ்சனா, சொனால் ரன்சார, சசிந்து லக்‌ஷன் ஆகியோர் பந்து வீச்சு மூலமும், சொனால் ரன்சார, கவிந்த பஸ்நாயக்கா, யசித் தேஷன் மற்றும் சிநேத் பிரவீன் ஆகியோர் துடுப்பாட்டத்தின் மூலமும் வெற்றிகளைக் குவித்திருந்தார்கள்.

குரூப் F இல் ஸ்கந்தவரோதயா, கொக்குவில் இந்து, யாழ். இந்து, யாழ். செய்ண்ட் பட்றிக்ஸ் ஆகியவற்றை மத்திய கல்லூரி தோற்கடித்தமையால் முன்னணிக்கு வந்திருந்தது. ‘நொக்கவுட்’ நிலைக்கு வந்ததும் இந்துஜனின் தலைமையின்கீழ் யாழ். மத்திய கல்லூரி பொலநறுவ றோயல் கல்லூரி, வததள செயிண்ட் ஜோசெப்ஸ் மற்றும் ஹன்வெல ராஜசிங்க செண்ட்றல் ஆகிய கல்லூரிகளைத் தோற்கடித்தது.

வித்யாலோக தரப்பின் அணித் தலமையை ஏற்ற பசிந்து லக்‌ஷன் குரூப் ‘J’ யின் முன்னணிக்குத் தனது அணியைக் கொண்டுவந்திருந்தார்.



அணிகள்:

Jaffna Central :

B. Inthujan (captain), V. Viyaskanth, S. Abiyuth, B. Kavitharshan, G. Janujan, T. Kaveejan, S. Sarangan, U. Tharmikan, J. Vithusan, A. Kajan, R. Newton, T. Gowtham, M. Sansayan, N. Ajay, S. Anusanth, S. Similtan, D. Poulparamathayalan, T. Abilash, S.Sayanthan, S. Mohommed. Officials: S. Tharshan (Master in Charge), F.R. Selton (Coach)

Vidyaloka College :

Pasindu Lakshan (Captain), Senith Praveen, Dilshan Kavinda, Dilan Rashinda, Dulara Nimsara, Sonal Ransara, Gihan Asanka, Chamith Shiran, Umesh Kavinda, Chamath Nirmal, Sasindu Lakshan, Hasanka Jayanath, Yasith Deshan, Umanga Imanjana, Dasun Chamod, Rashmika Prabath, Harsha Manohara, Hansaka Randeepa, Prageeth Bimsara. Officials: L.R. Manatunge (Master in Charge), Thusitha Kariyawasam (Coach).