Spread the love

பிறெக்சிட் ஆதரவிற்கு பொறிஸ் ஜோன்சனின் கைமாறு

ஜூலை 18, 2020: உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களின் நட்சத்திர நாயகனாகிய இங்கிலாந்தின் கிரிக்கெட் வீரர் சேர் இயன் போதத்திற்கு ‘பிரபு’ பட்டம் வழங்க பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பரிந்துரைத்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான (பிறெக்சிட்) திட்டம் கருக்கொண்ட நாட்களிலிருந்தே அதற்குத் தனது ஆதரவைப் பகிரங்கமாகத் தெரிவித்து வந்தவர் சேர் இயன் போதம்.

பொறிஸ் ஜோன்சன் பிரதமராகி ஒரு வருடம் பூர்த்தியாவதைக் கொண்டாடும் முகமாகப் பலரைக் கெளரவிக்க உத்தேசித்துள்ளார். பிறெக்சிட் விடயத்தில் தனக்கு ஆதரவு தந்தமைக்கு நன்றிக்கடனாக , 64 வயதாகும், சேர் இயன் போதத்திற்கு ‘பிரபு’ பட்டம் வழங்கிக் கெளரவிக்கத் தீர்மானித்துள்ளார்.

கிரிக்கெட் | சேர் இயன் போதம் Lord Ian Botham ஆகிறார் 1
Image Courtesy: Getty

இந்த வருடம், சேர் இயன் போதத்தோடு 30 பேருக்கு இக் கெளரவம் வழங்கப்படவிருக்கிறது.

இங்கிலாந்தின் அரசராலோ அல்லது அரசியாலோ தமது பரம்பரையினருக்கு வழங்கப்பட்டு வந்த இக் கெளரவம் 1958 இன் பின்னர் சாதாரண உழைக்கும் வர்க்கத்தவருக்கும் வழங்கப்படுகிறது. வெகு அருமையாகவே கையளிக்கப்படும் இக்கெளரவம் பெற்றவர்கள் இங்கிலாந்தின் பிரபுக்கள் சபையில் அங்கத்தவராகிறார்கள்.



சேர் இயன், இங்கிலாந்தின் கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் உலகப் பிரபலம் பெற்றவர். ஆல் ரவுண்டராகிய இவர் 5,200 ஓட்டங்களையும், 383 விக்கெட்களையும் பெற்றிருக்கிறார். பல உலக சாதனைகளைத் தன்னகத்தே வைத்திருக்கும் சேர் இயன், இலங்கையோடு தன்னை மிகவும் நெருக்கமாகப் பிணைத்துக்கொண்டவர்.

2004 ஆழிப்பேரலைக்குப் பின்னர் இலங்கையில் Sports for Life கட்டிட நிர்மாணத்துக்காக 160 மைல்களை நடந்து நிதி சேகரித்தவர். லியூகேமியா நோய் ஆராய்ச்சிக்காக பல மில்லியன் பவுண்டுகளைச் சேகரித்துக் கொடுத்தவர். மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் நட்சத்திரமாகிய விவியன் றிச்சார்ட்டின் நெருங்கிய நண்பராகிய சேர் இயன் தற்போது கிரிக்கெட் ஆட்டங்களுக்கு விவரணையாளராகவும் செயற்பட்டு வருகிறார்.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கையில் மனித உரிமைகளுக்குப் பின்னடைவு - பிரித்தானிய பாராளுமன்ற அறிக்கை