Sports

கிரிக்கெட்: ஒளிரும் தாரகை அமுருதா சுரேன்குமார்

இலங்கை அம்பாந்தோட்டை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 19 வயதுக்குக் கீழான, பெண்கள் T20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து குழுவின் சார்பில் விளையாடுகிறர் தமிழ்ப் பெண்ணான அமு என அழைக்கப்படும் அமுருதா சுரேன்குமார்.

அக்டோபர் 24, 2006 இல் பிறந்த மத்திய தர, வலது கரப் பந்துவீச்சாளரான அமு மிடிள்செக்ஸ் மற்றும் சன்றைஸேர் அக்கடெமி ஆகிய கவுண்டி குழுக்களுக்கு ஆடி வருபவர். கவுண்டிகளுக்கிடையேயான போட்டிகளில் இவரது முதலாவது ஆட்டம் 2002 இல் நடைபெற்ற மிடிள்செக்ஸ் vs ஹண்டிங்டன்சயர் ஆட்டத்துடன் தொடங்கியது. ஆனாலும் இவரது முதல் சீனியருக்கான ஒப்பந்தம் ஜூலை 1, 2023 இல் கையெழுத்திடப்பட்டு மறுநாளே சன்றைசேர்ஸ் சார்பில் சதேர்ண் வைப்பெர்ஸ்க்கு எதிராக விளையாடினார். இதில் அவர் 25 ஓட்டங்களைப் பெற்றதுடன் 8.3 ஓவர்களில் 44 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார். அந்த சீசனில் மேலும் 7 போட்டிகளில் விளையாடி மொத்தம் 7 விக்கட்டுகளை எடுத்திருந்தார்.

தற்போது இலங்கையில் நடைபெறும் T20 போட்டியின் மார்ச் 30 அன்று நடைபெற்ற மூன்றாம் ஆட்டத்தில் இங்கிலாந்து vs இலங்கைக்கான ஆட்டத்தில் மூன்றாமிடத்தில் துடுப்பெடுத்தாடியதோடு பந்துவீச்சாளராகவும் ஆடினார். இதில் ஜிம்ஹானியின் முதலாவது பந்துக்கு துடுப்பாடி விஹன்ஜாவின் catch இற்கு இரையாகி ஓட்டமேதும் எடுக்கவில்லையாயினும் இப்போட்டியின்போது இரண்டு catch களைப் பிடித்து அதிக ஓட்டங்களை எடுத்த இலங்கை வீராங்கனைகளான சேனாரத்ன மற்றும் நாணயக்கார ஆகியோரை அவுட் ஆக்கியிருந்தார். இப்போட்டியில் 6 ஓட்டங்களால் இலங்கை வெற்றி பெற்றது. (இலங்கை 128 / 7, இங்கிலாந்து 122 / 7).

“விளையாட ஆரம்பித்தவுடனேயே களத்தில் தனது முதிர்ச்சியைக் காட்டிவிட்ட அமுவுக்காக நான் மிகமகிழ்ச்சியடைகிறேன்” என அமுவைப் பற்றி அவரது தலைமைப் பயிற்சியாளர் ஆன்டி ரெனண்ட் பெருமைப்படுகின்றார்.