கிரிக்கெட் உலக கிண்ணம் 2019 | அவுஸ்திரேலியாவை அடித்து நொருக்கியது இந்தியா
இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 352 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 318 ஓட்டங்களையும் பெற்றுத் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா 57 ஓட்டங்களையும், தவான் 117 ஓட்டங்களையும், கோலி 82 ஓட்டங்களையும், பாண்டியா 48 ஓட்டங்களையும், தோனி 27 ஓட்டங்களையும், கே.எல்.ராஹுல் 11 ஓட்டங்களையும் எடுத்தனர். அவுஸ்திரேலிய தரப்பில் சிமித் 69, வார்ணர் 56, கெரி 55 ஓட்டங்களை எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ராவும் புவனேஷ்வரும் தலா 3 விக்கட்டுகளையும், சாஹுல் 2 விக்கட்டுக்களையும் எடுத்திருந்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றாலும் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் சிமித் ‘பவுண்டரி’ எல்லையில் நிற்கும்போது இந்திய ரசிகர்கள் கூக்குரலிட்டு நையாண்டி செய்தபோது கோலி அவர்களை நோக்கி சைகை செய்ததும் பின்னர் ரசிகர்களின் சார்பில் சிமித் திடம் மன்னிப்புக் கேட்டதும் அவதானிக்கப்பட்ட விடயங்கள். கடந்த வருடம் ஒரு போட்டியில் பந்து வீசுவதற்கு முன்னர் சிமித் இனம் தெரியாத பதார்த்தமொன்றைப் பந்து மீது பூசினார் என்ற குற்றச்சாட்டு விடயமாகவே ரசிகர்கள் கூக்குரல் எழுப்பினார்கள்.
1999 இற்குப் பிறகு இப்போதுதான் முதற்தடவையாக உலக கிண்ணப்போட்டியில் அவுஸ்திரேலியா தன் இலக்கை அடையத் தவறியுள்ளது.