IndiaSports

கிரிக்கெட் | இந்தியா 106 /3 (மதிய உணவு வரை)


Update: மதிய உணவிற்குப் பின்னர் தொடங்கிய ஆட்டத்தி, றோஹிட் சர்மா 95 பந்துகளில் 82 ஓட்டங்களையும் அஜிங்க்யா 21 பந்துகளில் 8 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்திய-இங்கிலாந்து 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாளில், இன்று மதியம் வரை – 26 ஓவர்களில், இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை எடுத்திருக்கிறது.

உதவி அணித் தலைவர் அஜிங்க்யா ராஹேனின் உதவியுடன் றோஹிட் சர்மா 78 பந்துகளில் 13 பவுண்டரிகளையும், ஒரு சிக்சரையும் எடுத்து ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறார்.

முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய சுப்மான் கில், செட்டேஷ்வர் புஜாரா மற்றும் அணித் தலைவர் விராட் கோலி ஆகியோரை இழந்த நிலையில் றோஹிட் சர்மா இந்திய அணிக்கு நம்பிக்கை தந்துகொண்டிருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளரான லீச், புஜாராவை அகற்ற ( c Stokes), அணித் தலைவர் விராட் கோலியை மோயீன் அலி அனுப்பி வைத்தார் (bowled). ஒலி ஸ்ரோனின் முதலாவது ஓவரில் சுப்மான் கில் எல்பிடபிள்யூ விற்குப் பலியானதுடன் இந்திய அணி சரியத் தொடங்கியது. இப்போது 21.2 ஓவர்களில் ஸ்கோர் 86/3. பின்னர் வந்த றோஹிட் சர்மாவும் ராஹேனும் நம்பிக்கையோடு ஆடி வருகிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் 4 வது இடத்தில் இருக்கும் இந்தியா இன்னுமொரு தடவை ஆட்டமிழந்தால் ரூர்ணமெண்ட்டிலிருந்து அகற்றப்பட்டுவிடும். உலக கிரிக்கெட் கிண்ண இறுதி ஆட்டத்துக்குச் செல்வதற்கு இதற்கு இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.



இந்திய அணி:

  • றோஹிட் சர்மா
  • ஷுப்மான் கில்
  • செட்டேஷ்வர் புஜாரா
  • விராட் கோலி (தலைவர்)
  • அஜிங்க்யா ராஹேன் (உதவி தலைவர்)
  • ரிஷாப் பாண்ட் ( விக்கட் கீப்பர்)
  • அக்ஸார் பட்டேல்
  • ரவிச்சந்திரன் அஷ்வின்
  • குல்டீப் யாதவ்
  • இஷாண்ட் சர்மா
  • மொஹாமெட் சிராஜ்

இங்கிலாந்து அணி:

  • ஜோ றூட் (அணித் தலைவர்)
  • டொமினிக் சிப்லி
  • றோறி பேர்ண்ஸ்
  • ஒலி போப்
  • டான் லோரன்ஸ்
  • பென் ஸ்டோக்ஸ்
  • பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்)
  • மோயீன் அலி
  • கிறிஸ் வோக்ஸ்
  • ஸ்ருஆர்ட் புறோட்
  • ஜாக் லீச்
  • ஒலி ஸ்டோன்