World

கிம் ஜொங்-உன் உயிருடன் உள்ளார்

வட கொரிய அதிபர் கிம் ஜொங்-உன், சில மேற்குநாடுகளின் ஊடகங்கள் சந்தேகப்பட்டதைப்போலல்லாது, உயிருடன் இருப்பது ‘தெரிய வந்துள்ளது’.

20 நாட்கள் ஒளித்து வாழ்ந்துவிட்டு, அவர் சன்சியோன் என்னுமிடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உரத் தொழிற்சாலை ஒன்றைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டதாக வட கொரியாவின் உத்தியோகபூர்வ ஊடகமான கொரியன் சென்றல் நியூஸ் ஏஜென்சி இன்று (சனி) தெரிவித்துள்ளது. கொரியாவின் தலைநகர் பியான்யொங்கிற்கு அருகிலுள்ள இன் நகரில் சடைபெற்ற விழாவில் கிம் ஜொங்-உன், அவரது சகோதரி கிம் யோ-ஜொங் மற்றும் மூத்த அரச அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

திறப்பு விழாவில் கிம் ஜொங்-உன் நாடா வெட்டும் படமொன்று றோடோங் சின்மம் என்னும் பத்திரிகை தனது இணையத்தளப் பதிப்பில் வெளியிட்டுள்ளது. நம்பகத்தன்மை பற்றி எதுவும்

இது பற்றி அமெரிக்க ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கப்பட்டபோது “நான் இப்போதைக்கு அதுபற்றிக் கருத்துக்கூற விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 15 இல் நடைபெற்ற, கொரியாவின் ஸ்தாபகரும், ஜொங்-உன்னின் தாத்தாவுமான கிம் இல்-சங்க்கின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாததையிட்டு ஜொங்-உன் மரணமடைந்திருக்கலாமெனவும், இருதய அறுவைச் சிகிச்சையிந்போது ஏற்பட்ட தவறினால் அவர் கோமாவில் இருப்பதாகவும் பல வதந்திக்ள் கடந்த சில நாட்களாக வெளிவந்துகொண்டிருந்தன. 2011 பதியேற்றதிலிருந்து, ஜொங்-உன் ஒரு போதும் இக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. அவருக்கு அடுத்ததாக யார் பதவி ஏற்க வாய்ப்புண்டு என்பது பற்றியெல்லாம் மேற்கத்தய ஊடகங்கள் ஊகம் தெர்வித்தவண்ணமிருந்தன.

தற்போது அவர் மீண்டும் பொது வாழ்வில் முகம் காட்டியிருக்கும் படங்கள் வெளிவந்துள்ளன.

2014 இல் கிம் ஜொங்-உன் 6 வாரங்கள் காணாமற் போயிருந்தபோதும் இதே போன்று ஆய்வுகளும் வியாக்கியானங்களும் பொதுவெளியில் உலா வந்தன. பின்னர் அவர் கைத் தடியுடன் காட்சி தந்தார். அப்போது அவரது முழங்காலில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றிருந்ததாகக்கூறி மேற்குலகம் கோப்புகளை மூடியிருந்தது.

அடுத்த தடவை அவர் மறைந்தருளுவதற்குள் இப்போதைய மர்மம் துலக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையுண்டு.

-மாயமான்