காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க. நிலைப்பாட்டை ஆதரிக்கும் ரஜனி -

காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க. நிலைப்பாட்டை ஆதரிக்கும் ரஜனி

Spread the love

காஷ்மீரில் ஜம்மு-காஷ்மீர், லடாக் பிரதேசங்களைப் பிரித்தமைக்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கும் நடிகர் ரஜனிகாந்த் இவ் விடயத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும் உள்ளக அமைச்சர் அமித் ஷாவையும் மகாபாரதத்தில் வரும் கிருஷ்ண பகவானுக்கும் அர்ஜுனனுக்கும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் எனவும் தெரிய வருகிறது. இதன் மூலம் அவர் பா.ஜ.க. ஆதரவை எடுக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காடுகிறார்கள். அதே வேளை நடிகர் கமலஹாசன் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு நடந்து கொண்டது தவறு, அது ஜனநாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் எனக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

எதிர்வரும் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் புதிய அரசியல் கட்சியொன்றை விரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக ரஜனிகாந்த் அறிவித்துள்ள நிலையில் அவரது பா.ஜ.க. ஆதரவு  இதர தமிழ்நாடு அரசியல் கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகளுக்கு முரணாக இருக்கிறது.

‘ஆன்மீக அரசியலை’ யே தனது கட்சி முன்னெடுக்கும் என ரஜனிகாந்த் அறிவித்திருந்தாலும் ஆட்சியிலுள்ள கட்சிகளின் நிலைப்படுகளையே அவர் எடுப்பது வழக்கம் எனவே அதுகுறித்து அதிகம் அக்கறைகொள்ளத் தேவையில்லை என தமிழ்நாட்டின் அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  டிஜிட்டல் இந்தியாவில் பொது இடங்களில் சலம் கழிப்பவர்களுக்கு அரசு வழங்கும் 'யுக்திமதி'!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *