காலம் 61-62: பேரா. நுஃமான் சிறப்பிதழ் வெளியீடு
பெப்.23 மாலை 4:00 மணி
எதிர்வரும் பெப். 23, ஞாயிறு பி.ப. 4:00 மணிக்கு மார்க்கம் / கிங்ஸ்டன் தெருக்களின் சந்திப்பில் அமைந்திருக்கும் ஸ்காபரோ விலேஜ் சனசமூக நிலையத்தில் பேராசிரியர் கவிஞர் நுஃமான் சிறப்பிதழாக வெளிவரும் காலம் சஞ்சிகையின் 61-62 ஆவது இதழ் வெளியீடு நடைபெறவிருக்கிறது.
”காலம் செல்வம்’ என இலக்கிய வட்டத்தில் அறியபட்ட செல்வம் அருளானந்தம் கடந்த 50 வருடங்களாக இலக்கியப்பணியாற்றி வருகிறார். 1980 களில் மொன்றியால் நகரிலிருந்து வெளியிடப்பட்ட பார்வை சஞ்சிகை மூலம் கனடிய இலக்கிய உலகில் அறியப்பட்ட செல்வம் அப்போதிருந்து பல உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ‘இலக்கிய ‘வாழும் தமிழ்’ என்னும் பெயரில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதும் வழக்கம். இதே வேளை ‘காலம்’ என்ற பெயரில் உலகப் படைப்பாளிகளின் படைப்புகளைத் தொகுத்து சஞ்சிகையாக வெளியிட்டு வருகிறார். தொடர் எண்ணாக வெளிவரும் இச்சஞ்சிகையின் 61-62 ஆம் இலக்கத் தொகுப்பு இவ்வருடம் பேராசிரியர் நுஃமானின் வாழ்வைக் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.
இன்றைய விழாவில் சமீபத்தில் மறைந்த நாடகர் குழந்தை சண்முகலிங்கம் மற்றும் அகால மரணமடைந்த வைகறை ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளர் ரவி அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறும். அத்தோடு இந்நிகழ்வில் காரைக் கவி கந்தையா பத்மாநந்தனின் சீத்துவக்கேடு நூல் அறிமுகமும் இடம்பெறும்.
கனடாவில் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரன், எழுத்தாள்ர் க.நவம், கவிஞர் ஒளவை, எஔத்தாளர் ப.சிறீஸ்கந்தன், சமூக செயற்பாட்டாளர்கள் யோகா வளவன், ஜெயச்சந்திரன், சித்திராங்கி ஆகியோர் இவ்விழாவில் பேசவுள்ளார்கள்.
இவ்விழா ‘நாயகனான’ பேரச்சிரியர் நுஃமான் 80 வயதை எய்துவதம் தமிழ்ப் படைப்பிலக்கிய உலகுக்கு அவர் உவந்த சாதனைகள் கெளரவிக்கப்படுவதும் தற்செயலானதல்ல. பேராசிரியர் நுஃமான் இலங்கையின் முற்போக்குக் களத்தில் ஒரு முக்கிய ஆளுமை. காலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி முகாமில் செல்வாக்கோடு மிளிர்ந்த பேரா. நுஃமான், தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழத்து முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான மஹாகவியைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர்.
இந்த விழாவில் பங்கேற்பது அவருக்குச் செய்யும் அற்புதமான கெள்ரவிப்பு. அனைவரும் வாருங்கள்.
வாசிப்பு மனங்களை வளப்படுத்துகிறது.
