'காணாமற் போனவர்களுக்கான' அலுவலகக் கிளை யாழில் திறப்பு! -

‘காணாமற் போனவர்களுக்கான’ அலுவலகக் கிளை யாழில் திறப்பு!

Spread the love

‘காணாமற் போனவர்களுக்கான’ அலுவலகத்தின் (Office of the Missing Persons) மூன்றாவது பிராந்தியக் கிளைஅடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ளது. இது, காணாமற் போனவர்களின் குடும்பங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இலகுவாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில், இல். 124, ஆடியபாதம் தெருவில் இவ்வலுவலகம்ஆகஸ்ட் 24ம் திகதி திறக்கப்படவுள்ளது. தற்போது காணாமற் போனவர்களுக்கானவர்களுக்கான அலுவலகத்தின் மேலும் இரண்டு பிராந்திய அலுவலகங்கள் மாத்தறவிலும் மன்னாரிலும் செயற்படுகின்றன.

திறப்புவிழா வைபவத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியா, அரசியலமைப்புச் சபையின் தலைவர் மனோ கணேசன் அவர்களும் கலந்து கொள்வர்.

சிறீலங்காவில் போர்க்காலத்தில் காணாமற் போனவர்களையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் தேடி, அவர்களுக்கு என்ன நடந்தது, எங்கு இருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்வதே இவ்வலுவலகத்தின் நோக்கமாகும்.

கடந்த நான்கு தசாப்தங்களாக நாட்டில் நடைபெற்ற சம்பவங்களின்போது இந் நாட்டின் குடிமக்கள் பலர் காணாமற் போயிருக்கிறார்கள் என்பதையும், அவர்களைக் தேடிக் கண்டுபிடிப்பதோ, உண்மைகளைக் கண்டறிவதோ அரசின் கடமை என்பதையும் அரசு அங்கீகரிப்பதின் அர்த்தமாகவே இந்த காணாமற் போனவர்களுக்கான அலுவலகத்தின் உருவாக்கம் பார்க்கப்படுகிறது.

“காணாமற் போனவர்களின் குடும்பங்கள் இவ்வலுவலகத்தை அணுகிக் காரியங்கள் மேற்கொள்வதை இலகுவாக்குவதற்காகவே இப் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன. குடும்ப உறவினர்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளல், தனிப்பட்டவர்களின் மீதான விசாரணைகளை மேற்கொள்ளுதல், சம்பந்தப்பட்ட இதர அரச சாதங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு நடப்பிலிருக்கும் விசாரணைகளைத் துரிதப்படுத்தல் போன்ற விடயங்களில் இவ்வலுவலகம் தன் செயற்பாடுகளை முன்னெடுக்கும். காணாமற் போனவர்களுக்கானவர்களின் அலுவலகம் பிராந்திய அலுவலகங்களை உருவாக்கி விஸ்தரித்து வரும் அதே வேளை, அது பாதிக்கப்பட்டவர்களினதும் அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து வழுவாது” என அலுவலகத்தின் அறிக்கையொன்று கூறுகின்றது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிட அனுமதியோம் - சீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *