காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.6,000

நவம்பர் கொடுப்பனவு ஆரம்பம்

செப்டம்பர் 20, 2019

2019 வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிட்டபடி இலங்கையின் காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்குத் தற்காலிக நிவாரணமாக மாதம் 60,000 ரூபாவை வழங்க மந்திரிரிசபை இணங்கியுள்ளது. இக்குடும்பங்களில் கடமையின்போது காணாமற்போன இராணுவம் மற்றும் காவற்துறையினரும் அடங்குவர் என நிதியமைச்சின் பேச்சாளர் தெரித்துள்ளார்.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம்

இக் குடும்பங்கள் தங்கள் பாசத்துக்குரியவர்களை இழந்ததனால் அடையும் வேதனைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் அப்பால் காணாமற்போனவர்களில் பலர் இக் குடும்பங்களின் தனி சம்பாத்தியக்காராகவும் இருந்ததனால் வருமானம் ஏதுமின்றி வறுமையில் வாடும் நிலையும் உண்டு.

காணாமற் போனவர்களின் செயலகம் ஆக்ஸ்ட் 2018 இல் வெளியிட்ட அறிக்கையில், காணாமற் போனதற்கான அத்தாட்சிப் பத்திரத்தை (Certificate of Absence) வைத்திருக்கும் காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று இச் செயலகம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கமைய, 2019 வரவுசெலவுத் திட்டத்தில் இக் கொடுப்பனவு உறுதிசெய்யப்பட்டது.

ஈடிழப்பு செயலகம் (Office of Reparations) அறுதியான நட்ட ஈட்டையும், இதர நிவாரணங்களையும் வழங்கும்வரை இந்த தற்காலிக, 6000 ரூ மாதக் கொடுப்பனவு காணாமற் போனவர்களின் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் இடப்படும்.

இதுவரையில் வடக்கிலும் தெற்கிலுமாக, 656 ‘காணாமற் போனவர்களுக்கான பத்திரங்கள்’ வழங்கப்பட்டுள்ளன. இதில் காணாமற் போன இராணுவத்தினரும், காவற்துறையினரும் அடங்குவர். இப் பத்திரங்கள் வழங்குதலைத் துரிதப்படுத்துவதற்காக பதிவாளர் நாயகத்தின் செயலகம் கூடுதலான அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்த்துள்ளது.