அறிவித்தல்கள்

காணவில்லை| திவாகர் பரம்சோதி – UPDATE

அறிவித்தல்

UPDATE: திவாகர் பரம்சோதி வீடு திரும்பி நலத்தோடு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது

நண்பர்கள் மத்தியில் திவா என அழைக்கப்படும் திவாகர் பரம்சோதி கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்பற்றுப் போயிருப்பதாகவும் அவரைத் தெரிந்தவர்கள், கண்டவர்கள் அல்லது அவரது நடமாட்டம் பற்றி அறிந்தவர்கள் யோர்க் பிராந்திய பொலிசாரோடு உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படி கேட்கப்படுகிறார்கள்.

வாண் நகரத்தில் வாழ்ந்துவந்த 43 வயதுடைய திவாகர் ஜூன் 19, 2023 மாலை 6 மணிக்கு அவரது குடும்பத்தினரோடு இறுதியாகத் தொடர்பு கொண்டிருந்தார் எனவும் அவர் ரொறோண்டோ நகரத்துக்கு இறுதியாகச் சென்றிருக்கலாம் என தாம் நம்புவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிறம்டன் நகரசபையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர் அடிக்கடி போர்ட் பெரி நகரத்துக்குச் சென்று வருபவர் என்பதையும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

43 வயதுடைய திவாகர் பரம்சோதி 5 அடி 5 அங்குலம் உயரம், 161 இறாத்தல் எடை, மண் நிறம், வழுக்கை விழுந்த தலை, குறுந்தாடி ஆகிய அடையாளங்களைக் கொண்டவர். காணாமற் போகும்போது அவர் கோடு போட்ட சிவப்பு கோல்ஃப் ஷேர்ட், காக்கி பாண்ட்ஸ் மற்றும் மண்நிற சப்பாத்துகளையும் அணிந்திருந்தார்.

தகவல் தெரிந்தவர் யோர்க் பிராந்திய 4 ஆவது மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுடன் 1-866-876-5423 – ext 7441 என்ற இலக்கத்துடனோ அல்லது கிறைம் ஸ்ரொப்பெர்ஸ் – 1-800-222-Tips என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளும்படி கேட்கப்படுகிறார்கள். (Image: YRP)