US & Canada

காசாவில் நடைபெறுவது இனப்படுகொலை அல்ல – கனடிய பிரதமர்

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு நடைபெறும் கொடுமைகளை இனப்படுகொலை என்று வரைவு செய்ய முடியாது என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ தெரிவித்துள்ளார்.

குவெல்ஃப், ஒன்ராறியோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் பிரதமர் ட்றூடோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “இவ்விடயத்தில் சர்வதேச நீதிமன்றம் மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டும் அதே வேளை தென்னாபிரிக்காவினால் இஸ்ரேல் மீது கொண்டுவரப்பட்ட வழக்குடன் கனடாவுக்கு உடன்பாடில்லை” என அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை இன்று பிற்பகல் வெளியிடவுள்ளதாக பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். (நன்றி: The Star) (PHOTO BY TIJANA MARTIN /THE CANADIAN PRESS)