கல்முனை சுகாதார சேவைகள் பிரிவில் ஒரு தீவிர சிகிச்சைக்கான கட்டில்கூட இல்லை – பா.உ. சாணக்கியன்
அம்பாறை மாவட்டத்தில் 7 அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் (மூன்று அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும், 20 வது திருத்தத்துக்காக கட்சி தாவியவர்களும்) இருக்கிறார்கள். அப்படியிருந்தும், இம் மாவட்டம் உள்ளடக்கும் கல்முனை பிரதேச வைத்திய சேவைகள் பிரிவில் (RDHS) ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான கட்டில் (ICU bed) கூட இல்லை என்பதைப் பற்றி இவர்களில் ஒருவர்தானும் கேள்வியெழுப்பவில்லை. இது வெட்கக்கேடு என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ. சாணக்கியன் ராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.
“கல்முனையைச் சேர்ந்த் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிநர்கள் இனவாதம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இவ்விடயத்தில் அமைதி காக்கிறார்கள். நோயாளிகளை நாம் எப்போதும் வாசல் பாதைகளில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது” என அவர் தனது உரையின்போது குறிப்பிட்டார்.