கறுப்பின் மகிமை | சேலைகளின் புரட்சி -

கறுப்பின் மகிமை | சேலைகளின் புரட்சி

சிவதாசன்

‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா, உந்தன் கரிய நிரம் தெரியுதடா நந்தலாலா’ என்று உலகைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போன உன்னத புரட்சிக் கவியின் எதிரொலி இவ்வண்டத்தை விட்டுப் போவதாயில்லை.

Writer Lekshmy Rajeev
எழுத்தாளர் லக்ஷ்மி ராஜீவ்

‘கருப்பி’ சரிதா தமிழ்த் திரைக்கு வர்ணம் பூசியது நிச்சயம் ‘இருண்ட’ காலமல்ல. கரிய நிறத்துக்கு அப்படியொரு கவர்ச்சிதான். இல்லாது போனால் கனடாவின் பிரதமர் தன் முகத்தை அப்படி அழகுபடுத்தியிருக்க மாட்டார். சில வேளைகளில் அதுவேதான் அவரது தேர்தல் வெற்றிக்குக் காரணமாகவும் இருக்கலாம்.

‘அழகிய’ ட்ரூடோ’

இன்று காலை பி.பி.சி. இணையத்தளத்தில் உலகை வலம் வரும் கரு(று)ப்புச் சேலைகள் பற்றி ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. பெண்கள் சேலைகளையா அல்லது சேலைகள் பெண்களையா அலங்கரித்திருந்தார்கள் என்பதில் கொஞ்சம் மயக்கம் தான்.

இந்தியாவுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பெருமையைத் தேடிக்கொடுத்து வருவது சேலை தான். தைக்காத ஒரு துண்டுத் துணியால் எப்படியெல்லாம் உடலைப் போர்த்திக் கொள்ளலாம் (அது மகாத்மாவாக இருந்தாலென்ன) என்பதற்கு இந்தியாவிடம், மன்னிக்க வேண்டும், தமிழ் நாட்டிடம் பாடம் கற்க வேண்டும். ‘கீழடி’யில் எப்போ சேலையைக் கண்டெடுப்பார்கள் என ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

காற்றோட்டமுள்ள, இலகுவில் வியர்வையை உடலிலிருந்து உறிஞ்சியகற்றக்கூடிய தமிழ்நாட்டின் காலநிலைக்கேற்ற, எல்லாவற்றுக்கும் மேலாக எந்தப் பெண்ணையும் அழகியாக்கிவிடக்கூடிய அற்புதமான தமிழனின் கண்டுபிடிப்பு பருத்திச் சேலை. பவனி வந்தாலென்ன ‘பவானியில்’ வந்தாலென்ன பார்வைகளைத் திருப்பும் வல்லமை அதற்குண்டு.

A combination of images shows a woman with different skin tones
கறுப்பிந் சாயல்கள் – இந்து ஜயராம்

‘கறுப்பின் பதினெட்டு சாயல்கள்’ (18 Shades of Black) என்ற சுலோகத்தின் கீழ் செல்வி நாயர் என்பவர் பதினெட்டுப் பெண்களைச் சேலைகளால் சுற்றி அழகுவலம் வரச் செய்து உலகச் செய்தியாக்கியதை பி.பி.சி. கண்டுவிட்டது. செல்வி நாயர் ஒரு உடை வடிவமைப்பாளர்.

எப்படி ஏ.ஆர்.ரஹ்மான், மேற்கைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த எமது துள்ளல் குட்டிகளைத் தமிழுக்குள் இழுத்து வந்தாரோ அதே போல் செல்வி நாயர்கள் போன்றவர்கள் எங்கள் இளம் பெண்களையும் கொஞ்சம் அப்படியே வாரிக்கொண்டு வந்து தமிழுலகத்தில் விட்டுவிட்டுப் போக வாய்ப்புண்டு. வேட்டிக் கோஷ்டிகளும் தயாராகலாம்.

செல்வி நாயருக்கு இந்த ஞானம் ‘சபரி மலை’யில் கிடைத்ததாம். ருது வயதுடைய பெண்கள் சபரிமலைக்குப் போகமுடியாது என்ற கட்டுப்பாட்டைச் சென்ற வருடம் உச்சநீதிமன்றம் உடைத்தெறிந்தபோது தெறித்த பொறி சேலையில் பற்றியதன் விளைவுதான் இது என்கிறார் செல்வி நாயர். சபரிமலையென்ன சந்திரமலைக்கே அழைத்துப் போகிறேன் என்று அவர் புறப்பட்டிருக்கலாம்.

Sowmya Radha Vidyadhar
எழுத்தாளர், புலவர் ராதிகா வித்யாகர் – படம் பி.பி.சி.

எப்படியோ ‘கறுப்பின் 18 சாயல்கள்’ பிறந்திருக்கிறது. இதனால் அரசியல் வளம்பெறுகிறதா அவரது வியாபாரம் வளம்பெறுகிறதா என்ற விவாதம் அவசியமில்லை. ஒன்றில் இன்னொன்று குதிரையோடுவதுதானே இன்றய உலக அரசியல்.

தமிழரின் பெண் தெய்வங்கள் எல்லாமே கறுப்புத் தான். கருவறையிலிருந்து வெளியே வந்த காளியாத்தாவை மீண்டும் கர்ப்பக்கிருகத்தில் கொண்டுபோய் வைத்தத நாம்தான் அதன் விடுதலைக்காகவும் போராடவேண்டியிருக்கிறது. அதைக் கருப்புச் சேலையின் வடிவில் செல்வி நாயர் செய்து வருகிறார், with a kind of feminist undertone.

The campaign uses fashion to challenge faith, questioning outdated beliefs that are perpetuated by a society steeped in patriarchy. It tackles issues like body shaming, discrimination on the basis of skin colour, early marriage, stigma around menstruation, caste discrimination, patriarchy and even a lack of clean toilets for women.

BBC
Interior designer Smitha Naik talks about the unflattering way in which women drivers are perceived and the bullying they face on the roads
கொஞ்சம் ஓவர் – ஸ்மிதா நாயக்

செல்வி நாயரின் இந்த சேலைப் புரட்சி பதிப்பித்த இந்தியாவின் கருப்புப் பக்கங்களை பி.பி.சி. உலகுக்குப் புரட்டிக் காட்டுகிறது. அது புதிய பல விவாதங்களைக் கிளப்பலாம். புழுதியையும் கிளப்பலாம். எல்லாம் நன்மைக்கே.

Related:  இளவரசர் கோதபாய ராஜபக்சவுக்கு முடிசூட்டு விழா!

மாட்டை மரத்தில் கட்டிவிட்டு மரத்தைப் பற்றிப் பேசுவதும் ஊடக மரபு என்பதில் நானும் உடன்படுகிறேன்.

நன்றி: BBC / Photos by Midhun Divakar

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
error

Enjoy this blog? Please spread the word :)