Spread the love

கொறோனாவைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கர்நாடகா அரசு எல்லைகளை மூடியதுடன், சகல விமான நிலையங்களிலும் வந்திறங்கும் உள்நாட்டுப் பயணிகளையும் பரிசோதனை செய்யவேண்டுமென அம் மாநிலத்தின் முதலமைச்சர் பி.எஸ். யெதியூரப்பா உததரவிட்டுள்ளார்.

அம் மாநிலத்தின் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து இன்று (ஞாயிறு) முதலமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்தோடு, அடுத்த இரண்டு மாதங்களுக்கும் மாநிலத்தின் சகல மக்களுக்கும் இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்குவதற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இரு மாதத்துக்குரிய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ஒரே தடவையில் வழங்கப்படும்.

தற்போது நடைபெற்றுவரும் எஸ்.எஸ்.எல்.சி (10ம் வகுப்பு) பரீட்சைகளும் பின்போடப்பட்டதுடன், பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரங்களில் வாழும் மக்களை அடுத்த 15 நாட்களுக்குக் கிராமங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படியும் அரசு பணித்துள்ளது. மற்றும்படி சகல பிரதான சேவைகளும் தொடருமென அரசு கூறியுள்ளது.

இன்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போது, முதலமைச்சர், பெங்களூருவின் விக்டோரியா மருத்துவமனையில் உள்ள 7,000 கட்டில்களும் கோவிட்-19 நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதெனவும், நோயறிகுறிகளைக் கொண்டவர்களும், இல்லாதவர்களும் அங்கு பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.

“இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதியோடு, நாங்கள் தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளின் ஆய்வுகூடங்களைத் தொற்றுப் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்த எண்ணியுள்ளோம். ஒருவரும் பண்டங்களைப் பதுக்கத் தேவையில்லை. எல்லோருக்கும் இரண்டு மாதத்துக்குரிய மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்” என முதலமைச்சர் குறிப்பிட்டார்.



கர்நாடகா மாநிலத்தில், மார்ச் 31 வரை நடமாட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 நோய்த்தொற்றாளர்கள் உருதிப்படுத்தப்பட்டுள்ளனர். அங்காடிகள், உணவகங்கள், குடிபான நிலையங்கள், திரையரங்குகள் எனச் சகல மக்கள் கூடும் இடங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் 320 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டும், 6 பேர் மரணமாயுமுள்ளனர்.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | இரண்டு மடங்கு நோயாளிகள் உணவகங்களில் உணவருந்தியவர்கள் - ஆய்வு
கர்நாடகா மாநிலம் எல்லைகளை மூடியது | சகலருக்கும் இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன்!

கர்நாடகா மாநிலம் எல்லைகளை மூடியது | சகலருக்கும் இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன்!