News & AnalysisSri Lanka

கரையொதுங்கும் இறந்த ஆமைகளின் படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டவை – மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எம்.வி.எக்ஸ்பிரெஸ் கப்பல் அமிழ்ந்த சம்பவத்தின் பின்னர் கரையொதுங்குவதாகக் காட்டப்படும் ஆமைகளின் படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பாடவை என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எம்.வி.எக்ஸ்பிரெஸ் சம்பவத்தைத் தொடர்ந்து வடபகுதிக் கரையோரம் பல கடல்வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கரையொதுங்கி வருகின்றன. இப்படிக் கரையொதுங்கியதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை எனவும் அவற்றில் காட்டப்படும் படங்கள் இணையத்தி எடுக்கப்பட்டவை எனவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதே வேளை, கரையொதுங்கும் கடலுயினங்களின் உடல்கள் தொடர்பாகக் கருத்து தெரிவித்த அமைச்சர் சாமல் ராஜபக்ச ” ஒரு குறிக்கப்பட்ட பருவ காலத்தில் இப்படிக் கடலுயிரினங்கள் கரையொதுங்குவது வழக்கம்” எனக்கூறியுள்ளார். சீன நிறுவனம் ஒன்றினால் ஆரம்பிக்கப்பட்ட பண்ணை ஒன்றைத் திறந்துவைத்துப் பேசும்போது ராஜபக்ச இப்படித் தெரிவித்தார்.

கடற்கரை பராமரிப்பு ராஜாங்க அமைச்சர் நாளக கொடஹேவா, இக் கடலுயிரினங்கள் பற்றிக் கூறும்போது கடலில் அலை உச்சம் பெறும் நாட்களில் உயிரினம் கரையொதுங்குவது வழக்கம் எனத் தெரிவித்துள்ளார்.