கருணாவைக் கைதுசெய்யும்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்தது


ஜூலை 21, 2020: போரின் போது இராணுவத்தினரைக் கொன்றார் என்ற குற்றசாட்டில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணாவைக் கைதுசெய்யும்படி தொடரப்பட்ட வழக்கை அப்பீல் நீதிமன்றம் பரிசீலிக்க மறுத்திருக்கிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் சான்றுக்கட்டளை மற்றும் சர்வதேச சிவில், அரசியல் உரிமைகள் உடன்படிக்கைகளின் பிரகாரம், கருணா மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென கடுவெல நகரசபை உறுப்பினர் பொசெத் கலஹபத்திரான நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார்.

“மே மாதம் 19 ம் திகதி நடைபெற்ற கூட்டமொன்றில், ஆனையிறவுச் சமரின்போது தாங்கள் (விடுதலைப் புலிகள்) 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொன்றிருந்தோம், நான் கொறோணாவைவிட் மோசமானவன்” என கருணாவின் பேச்சை ஆதாரமாக வைத்து இவ் வழக்குப் போடப்பட்டிருந்தது.