கருணாவுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி!

கருணாவுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி!

Spread the love

பிரதமர் ராஜபக்சவின் பிரத்தியேக பணியாளர் குழுவில் அடங்குவார்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிரத்தியேக பணியாளர்களி ஒருவராக இருந்து அவர் இப்பணியை ஆற்றுவார்.

அவருக்கு அனுப்பப்பட்ட நியமனக் கடிதத்தில், இப் பதவி தற்காலிகமானது எனவும், பிரதமரின் பதவிக் காலத்திற்குச் சமமாகவோ அல்லது பிரதமரது விருப்பப்படியோ இப் பதவிக் காலம் நிர்ணயிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப் பதவிக் காலத்தில் கருணா வேறெந்த நிரந்தரமான, தற்காலிகமான அல்லது திட்டமிடப்படாத பொதுத் திணைக்கள வேலைகளில் ஈடுபட முடியாது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email