கமல் ஹாசனுக்கு 65 வயது: பரமக்குடியில் குடும்பத்தினருடன் கொண்டாட்டம்! -

கமல் ஹாசனுக்கு 65 வயது: பரமக்குடியில் குடும்பத்தினருடன் கொண்டாட்டம்!

60 வருடத் திரையுலக வாழ்வையும் கொண்டாடுவதற்கு ஏற்பாடு

நவம்பர் 7, 2019

Kamal Haasan and his family on their way to Paramakudi
கமல், ஷாரு, மகள்கள் ஷுருதி, அக்‌ஷராவுடன் பரமக்குடி போகும்போது படம்: அக்‌ஷராவின் இன்ஸ்ராகிராம்

உலகநாயகன் கமல் ஹாசனுக்கு இன்று 65 வயதாகிறது. அவர் தனது பிறந்த நாளைத் தன் குடும்பத்தினருடன் பிறந்த இடமான பரமக்குடியில் கொண்டாடினார். அவரோடு அவரது சகோதரர் சாரு ஹாசன், மக்கள் சுருதி மற்றும் அக்சரா ஆகியோர் உடனிருந்தனர்.

கமல் ஹாசன் தன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தந்தையார் டி.சிறினிவாசன் அவர்களுடைய உருவச் சிலையொன்றை அவர் பிறந்த பரமக்குடியில் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.சிறினிவாசன் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியவருமாவர்.

கமல் ஹாசனின் பிறந்தநாளுடன் அவரது 60 ஆண்டு காலத் திரையுலக வாழ்க்கையையும் சேர்த்து அவர் பிறந்த ஊரான பரமக்குடியில் மூன்று நாட்கள் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *