கமல்ஹாசன் கோவிட் தொற்றிலிருந்து சுகம் பெறுகிறார் – மருத்துவமனை
அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், நவம்பர் 22 இல் கோவிட் 19 தொற்றுக்குள்ளாகியிருக்கிறார் என உறுதிப்படுத்தப்பட்ட நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் மருத்துவமனையொன்றில் அனுமதித்ததன் மூலம் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார்.
டிசம்பர் 3 வரை அவரது தனிமைப்படுத்தல் தொடருமாயினும், அவர் பூரணமாகக் குணமாகியிருக்கிறார் எனவும் மருத்துவமனையிலிருந்து வெளீயேறியதும் அவர் தனது கடமைகளைத் தொடரமுடியுமெனவும் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
புதனன்று ((01), சென்னை தனியார் மருத்துவமனையான சிறி ராமச்சந்திர மருத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அவருக்கு சாதுவான கோவிட்-19 தொர்று ஏற்பட்டிருந்ததாகவும் அதற்கான சிகிச்சை அவருக்கௌ அளிக்கப்பட்டதாகவும் அவ்ர் இப்போது பூரண சுகமடைந்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளது.
“KH House of Khaddar” என்ற ஆடைவகை, “KH Memoir” என்ற வாசனைத் திரவியம் ஆகிய தனது புதிய ‘பிராண்டுகளை’ அறிமுகம் செய்யவென அவர் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருந்தார். கதர் ஆடைகளை மேற்குநாடுகளுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் தமிழ்நாட்டிலுல்ள ஏழை கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தமுடியுமெனத் தான் நம்புவதாக சிக்காக்கோவில் நடைபெற்ற அறிமுக வைபவத்தில் தெரிவித்திருந்தார்.
பண்டய காலங்களில் கோவில்களிலும் சமயச் சடங்குகளிலும் பாவிக்கப்பட்ட வாசனைத் திரவியங்களினால் ஈர்க்கப்பட்டதால் தான் “KH Memoir” ரக வாசனைத் திரவியத்தை அறிமுகப்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அறிமுக விற்பனையின்போது கிடைக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை அவர் ‘Pivoting in Heels’ என்ற இலாப நோக்கற்ற அமைப்புக்குத் தானம் செய்துள்ளார். (தி நியூஸ் மினிட்)