US & Canada

கனடிய அமைச்சரவை மாற்றம்: ஆனந்தசங்கரி அமைச்சராகிறார்

விரைவில் பொதுத்தேர்தலொன்றுக்குத் தயாராகும் நிலையில் ஆட்சியில் இருக்கும் லிபரல் அரசு தனது அமைச்சரவையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. இதில் ஈழத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி முடி-பூர்வகுடி உறவுகளுக்கான ஆமைச்சராக நியமனம் பெறுகிறார். கனடிய அமைச்சரவையில் இடம்பெறும் இரண்டாவது தமிழர் இவரென்பது குறிப்பிடத்தக்கக்து. இந்திய தமிழர் பூர்வீகத்தைக் கொண்டவரும் முன்னர் பாதுகாப்பு அமைச்சருமாகவிருந்த அனித்தா ஆனந்த் தற்போது திறைசேரிச் சபை அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இன்றைய மாற்றத்தின் பின் அமைச்சரவை நிலவரம்:

 • Anita Anand becomes President of the Treasury Board
 • Marie-Claude Bibeau becomes Minister of National Revenue
 • Bill Blair becomes Minister of National Defence
 • Randy Boissonnault becomes Minister of Employment, Workforce Development and Official Languages
 • Jean-Yves Duclos becomes Minister of Public Services and Procurement
 • Sean Fraser becomes Minister of Housing, Infrastructure and Communities
 • Karina Gould becomes Leader of the Government in the House of Commons
 • Mark Holland becomes Minister of Health
 • Ahmed Hussen becomes Minister of International Development
 • Gudie Hutchings becomes Minister of Rural Economic Development and Minister responsible for the Atlantic Canada Opportunities Agency
 • Kamal Khera becomes Minister of Diversity, Inclusion and Persons with Disabilitieshttps://ffd79b0c430c108ac6b0dd9b9eb9edfe.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html
 • Dominic LeBlanc becomes Minister of Public Safety, Democratic Institutions and Intergovernmental Affairs
 • Diane Lebouthillier becomes Minister of Fisheries, Oceans and the Canadian Coast Guard
 • Lawrence MacAulay becomes Minister of Agriculture and Agri-Food
 • Marc Miller becomes Minister of Immigration, Refugees and Citizenship
 • Mary Ng becomes Minister of Export Promotion, International Trade and Economic Development
 • Seamus O’Regan Jr. becomes Minister of Labour and Seniors
 • Ginette Petitpas Taylor becomes Minister of Veterans Affairs and Associate Minister of National Defence
 • Carla Qualtrough becomes Minister of Sport and Physical Activity
 • Pablo Rodriguez becomes Minister of Transport and will continue to serve as Quebec Lieutenant
 • Harjit S. Sajjan becomes President of the King’s Privy Council for Canada and Minister of Emergency Preparedness and Minister responsible for the Pacific Economic Development Agency of Canada
 • Pascale St-Onge becomes Minister of Canadian Heritage
 • Jonathan Wilkinson becomes Minister of Energy and Natural Resources

புதிதாக அமைச்சரவை நியமனம் பெற்றவர்கள்:

 • Gary Anandasangaree becomes Minister of Crown-Indigenous Relations
 • Terry Beech becomes Minister of Citizens’ Services
 • Soraya Martinez Ferrada becomes Minister of Tourism and Minister responsible for the Economic Development Agency of Canada for the Regions of Quebec
 • Ya’ara Saks becomes Minister of Mental Health and Addictions and Associate Minister of Health
 • Jenna Sudds becomes Minister of Families, Children and Social Development
 • Rechie Valdez becomes Minister of Small Business
 • Arif Virani becomes Minister of Justice and Attorney General of Canada

முந்திய அமைச்சரவையிலிருந்து 7 அமைச்சர்களது பதவிகள் பறிபோய்விட்டன.

சத்தியசங்கரி (கெரி) ஆனந்தசங்கரி

இலங்கையில் பிறந்த கெரி தனது தாயாருடன் கனடாவுக்கு ஆகஸ்ட் 31, 1983 இல் வந்தார். தற்போது இலங்கையில் வாழும் இவருடைய தந்தையார் வீ.ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராவார்.கார்ள்டன் பல்கலைக் கழகத்தில் கற்ற கெரி 1996 இல் அரசியல் விஞ்ஞானத்தில் பி.ஏ. சிறப்பு பட்டத்தைப் பெற்றுக்கொண்டு வீடு விற்பனை முகவராகச் சிலகாலம் பணியாற்றினார். இதே காலப்பகுதியில் அவர் யோர்க் பல்கலைக்கழகம், ஒஸ்கூட் சட்டக்கல்லூரி ஆகியவற்றில் கற்று 2005 இல் சட்டக்கல்வியை முடித்துக்கொண்டு 2006 இல் ஒன்ராறியோ சட்டத்தரணியாக அங்கீகாரம் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் தனது சொந்த சட்ட அலுவலகத்தை ஆரம்பித்தார்.

பாடசாலைக் காலங்களிலிருந்தே கெரி சமூக சேவை அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புகள், மாணவர் அமைப்புக்கள், உள்ளூர் அரசியல் மற்றும் ஈழவிடுதலை தொடர்பான அமைப்புக்களுடன் நேரடியாகவும் பின்னணியிலும் செயற்பட்டு வந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் பல தடவைகள் தமிழர் சார்பாகப் பிரதிநிதித்துவம் செய்து ஈழத்தமிழர் உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபட்டதன் காரணமாக இவர் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் என இலங்கையின் சிங்கள தீவிரவாதிகளால் குற்றம்சாட்டப்பட்டதன் விளைவாக இலங்கை செல்வதற்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டது.

கனடிய அரசியல்

கனடிய லிபரல் கட்சி ஆதரவாளராக இருந்த கெரி 2013 இல் கட்சி அங்கத்தவராகி 2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இரண்டாவது தடவையாகவும் 2019 இல் நடிபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியப் பெற்றார். இதன் காரணமாக அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படுமென்ற பலத்த எதிர்பார்ப்பு அப்போது இருந்தது. லிபரல் கட்சி இவரைக் கவனிக்காது விட்டது தொடர்பாக தமிழர்கள் மத்தியில் பலத்த் அதிருப்தி நிலவியது.

2011 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதன் முதலாகத் தமிழரான ராதிகா சிற்சபையீசன் ஸ்காபரோ றூஜ் தொகுதியில் என்.டி.பி. கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றிய ஈட்டியதுமல்லாது கனடிய அரசியலில் தமிழரது அரசியல் மற்றும் வாக்கு பலம் தொடர்பாக இதர கட்சிகளின், குறிப்பாக லிபரல் கட்சியின், மனநிலையில் பாரிய மாற்றமொன்றை நிகழ்த்தியிருந்தது. ஸ்காபரோ ரூஜ் தொகுதியின் அண்டையிலுள்ள மூன்று தொகுதிகளில் முன்னாள் லிபரல் உறுப்பினர்கள் தோல்வியடைந்தனர். இதற்கு காரணம் லிபரல் கட்சி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில்கூட தமிழர் ஒருவரையும் வேட்பாளராக நியமிக்காமை என்பது அவர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. லிபரல் கோட்டையாக இருந்த ஸ்காபரோ ரூஜ் தொகுதியை மட்டுமல்லாது அயல் தொகுதிகளையும் இழந்த லிபரல் கட்சிக்கு அப்போது தான் ஞானம் பிறந்தது. அதன் வெளிப்பாடே கெரி ஆனந்தசங்கரியை 2015 இல் வேட்பாளராக்கியமை என்பது பல தமிழர்களது கருத்து. 2019 பொதுத் தேர்தலில் 29,906 வாக்குகளை எடுத்து (60.1%) இத்தமிழர்களின் கருத்து சரியென்பதை ஆனந்தசங்கரி நிரூபித்திருக்கிறார்.

அமைச்சரவை

முடி-பூர்வீக குடி உறவுகள் அமைச்சு என்பது ஒரு இலகுவான ஒன்றல்ல. கனடாவில் 630 முதற்குடி சமூகங்கள் (First Nations), 50 தேசங்கள் இருக்கின்றன. இவர்கள் 50 மொழிகளைப் மேசுகிறார்கள். இவர்கள் தமக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் (reserves) தமது கலாச்சாரம், மொழியைப் பேணிக்கொண்டு வாழவிரும்புகிறார்கள். மத்திய அரசு இவர்களுக்கென வருடா வருடம் குறிப்பிட்ட நிதியை ஒதுக்குகிறது. நிர்வாகங்களை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். ஆனாலும் மத்திய அரசு இவர்கள் விடயத்தில் பாராமுகமாக இருக்கிறது என்பது பலரது குற்றச்சாட்டு. இப்படியான சமூகங்களில் குழாய்களில் குடிநீர் கிடைக்காமை, உணவு பற்றாக்குறை, மாசடைந்த நிலம் போன்ற பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. அதைவிட இந்திய சட்டத்தை (Indian Act) ஏற்றுக்கொள்ளாத இளைய, படித்த முதற்குடிகள் எங்கள் ஊரில் போல போர்க்கொடி தூக்கிவருவதும் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளுக்குக் குந்தகம் விளைவிக்கிறது என்கிறார்கள். எனவே இந்த அமைச்சும் இலகுவானதொன்றல்ல.

கெரி ஆனந்த சங்கரிக்கு டிசம்ப்ர் 3, 2021 இல் நீதி அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ உதவி அமைச்சர் போல. இதனால் அவருக்கு அமைச்சரவை அனுபவங்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்நிலையில் அவருக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் புதிய அமைச்சுப் பதவியைத் திறம்படச் செய்து தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பாரென நம்பலாம்.