கனடா | ஸ்காபரோவில் தமிழ்ப் பெண் சுட்டுக் கொலை!

Spread the love

மார்ச் 15, 2020

கனடாவில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியான ஸ்காபரோவில் 38 வயதுடைய தமிழ்க் குடும்பப் பெண்ணொருவர், நேற்றுக் காலை 9:50 மணியளவில், அவரது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச் சூட்டுச் சம்பவத்தின் போது அவரது தாயாரும் காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென ரொறோன்டோ பொலிஸ் சேவையின் தகவற் பிரிவு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர் 38 வயதுடைய தீபா சீவரட்ணம் எனவும், அவர்கள் வாழ்ந்த ஸ்காபரோ கிழக்குப் பகுதியில் பிறிம்லி ரோட் / பிற்ஃபீல்ட் சந்திப்பில் உள்ள வீடொன்றில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதெனவும் ரொறோண்டோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.

“காலை 9:55 மணிக்கு வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குப் பொலிசார் விரைந்து சென்றபோது அங்கு இரு பெண்கள் காயப்பட்ட நிலையில் காணப்பட்டனரெனவும், அவசர சேவைகள் உத்தியோகத்தர்கள் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் அவர்களில் ஒருவர் சூட்டுக்காயங்களினால் உயயிரிழந்தாரெனவும் மற்றவர் காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் சேவைகள் தெரிவித்துள்ளது.

இறந்தவர் 38 வயதுடைய தீபா சீவரட்ணம் எனப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

இறந்தவர் மீது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, மரணத்தின் காரணம் நெஞ்சில் ஏற்பட்ட சூட்டுக் காயம் என உறுதிசெய்ப்பட்டது.

துப்பாக்கிதாரி, சுமார் 5’10” உயரமும், சுமாரான உடற்பருமனும் கொண்டவரெனவும், சம்பவத்தின்போது அவர் இளநிற நீளக்காற்சட்டையும் கறுப்பு கோட்டும் அணிந்திருந்தாரெனவும் அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் ரொறோண்டோ கொலைப்பிரிவுடன் பின்வரும் முறைகளில் தொடர்பு கொள்ளலாம்:

Ref.: Case#: 2020-524758

(Homicide) 416-808-7400

Crime Stoppers (anonymously): 416-222-TIPS (8477)

Online at www.222tips.com

Facebook Leave a Tip page

Message to CRIMES (274637)

For more news: TPSnews.ca.

Constable Alex Li, Corporate Communications, for Detective Sergeant Terry Browne, Homicide

Print Friendly, PDF & Email
Related:  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை!

Leave a Reply

>/center>