• Post category:CANADA / MONEY
  • Post published:July 23, 2020
Spread the love

ஜூலை 23, 2020: கோவிட்-19 தொற்றுக் காரணமாக வீட்டிலிருந்து அலுவலக வேலைகளைச் செய்பவர்களுக்கு அரசாங்கம் வரிச் சலுகைகளை வழங்கவிருக்கிறது. பல இலட்சக்கணக்கானவர்கள இப் பலனைப் பெறக்கூடியதாகவிருந்தாலும் யாரெல்லாம் இச் சலுகைகளை அனுபவிக்கலாம் என்பது அவர்களள் பணி புரியும் நிறுவனங்களையும், கனடிய வரித் திணைக்களமுமே தீர்மானிப்பார்கள்.

“work-space-in-the-home” என்ற பெயரில் அறிமுகமாகும் இவ் வரிக்கழிவுக்கு ஒருவர் தகுதியைப் பெற அவர் தன் பணியின் 50% த்துக்குமேல் வீட்டில் இருந்து செய்திருக்க வேண்டும் அல்லது தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் (அலுவலகம் அல்லாத) வாடிக்கையாளரைச் சந்தித்துப் பணிபுரிந்திருக்க வேண்டும்.

எப்படியிருந்தாலும், ‘வீட்டிலிருந்து வேலை செய்வது உங்கள் பணிக்கான ஒரு நிமந்தனை” (condition of employment) என உங்கள் முதலாளி உத்தரவாதப்படுத்த வேண்டும்.

கோவிட் நோய்த் தொற்றுக்கு முன்னர், சுய தொழில் செய்பவர்கள், வீடு விற்பனை முகவர்கள் போன்றோர் தமது வீட்டில் ஒரு பகுதியைத் தமது பணிக்காகப் பாவிக்கிறோம் எனக்கூறி வீட்டிற்கான சில செலவுகளில் ஒரு பகுதியை வரிக் கழிவுகளாகப் பயனபடுத்துவது வழக்கம்.

அதே போன்று IT போன்ற தொழில்களில் உள்ளவர்கள் அலுவலகங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து பணி புரிவதற்கு அவர்களது முதலாளிகளால் அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அப்பணியாளர்களும் தமது வீட்டிற்கான செலவுகளில் ஒரு பகுதியை வரிக்கழிவுக்காகப் பாவித்தார்கள். ஆனால் இதற்கு T2200 என்ற பத்திரம் ஒன்றை அவர்களது முதலாளிகள் நிரப்பி, ‘வீட்டிலிருந்து பணி புரிவது ஒரு நிபந்தனை’ என்பதை அத்தாட்சிப் படுத்த வேண்டியிருந்தது.

கோவிட் தொற்றுக்குப் பிறகு இன் நிலைமை மாறிவிட்டது.

மார்ச் மாதம் முதல் கோவிட் தொற்று வேகமாகப் பரவ ஆரம்பித்ததும் பொதுச் சுகாதார நிர்வாகம், அத்தியாவசிய பணிகளைச் செய்பவர்களைத் தவிர, கனடியப் பணியாளர்களை வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். இப்படியானவர்களில் பலர் வீட்டிலிருந்தே பணி புரிய நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஏப்ரல் மாத நடுப்பகுதியில் 3.3 மில்லியன் கனடியர்கள் அலுவலகங்களிலிருந்து வீடுகளுக்குத் தமது பணிகளை மாற்றிக்கொண்டு விட்டனர். சில நிறுவனங்கள் தமது பணியாளர்களை நிரந்தரமாகவே வீட்டிலிருந்து பணிபுரியும்படி பணித்திருக்கின்றனர்.



செப்டெம்பர் மாதத்துடன் இப்படியான பணியாளர்கள் 6 மாதங்களை வீட்டிலிருந்து பணி செய்து முடித்தபடியால் (வருடத்தின் 50%) அவர்கள் வரித் திணைக்களத்தின் சலுகைக்கு உரித்துடையவர்களாகிறார்கள். ஆனால் முழு 6 மாதங்கள் வீட்டிலிருந்து பணி புரியாதவர்கள் இந்த வரிக்கழிவுக்கு உரித்துடையவர்களா என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை.

முழுமையாக 6 மாதங்களை முடித்திராதவர்கள், தமது பணிகளுக்காக தமது வீட்டின் ஒரு பகுதியையும், அதன் வளங்களையும் பாவித்தமைக்காக அவர்களுக்கு வரிச் சலுகைகளைப் பெற இன்னும் அனுமதியுண்டு. எனவே வீட்டின் செலவுகளுக்கான பற்றுச்சீட்டுகளைக் (receipts) கவனமாக வைத்திருப்பது நல்லது.

அத்தோடு, முதலாளிகளுடன் பேசி உங்கள் பணிக்கான ஒப்பந்தங்களைச் சரிபார்த்துக்கொள்வதுவும் நல்லது. வாடிக்கையாளர்களோடு zoom வழியாகச் சந்திப்புகளை நிகழ்த்தியிருப்பின் அவற்றிற்கான ஆதாரங்களை வைத்திருப்பது நல்லது.

Print Friendly, PDF & Email