கனடா | யோர்க் பல்கலைகழகத்தின்  மார்க்கம் வளாக கட்டுமானப்பணிகள் ஆரம்பம்.

கனடா | யோர்க் பல்கலைகழகத்தின் மார்க்கம் வளாக கட்டுமானப்பணிகள் ஆரம்பம்.

Spread the love

கனடாவில் புகழ்பூத்த யோர்க் பல்கலைகழகம் – மார்க்கம் வளாகத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பம் செப்டம்பர் 22ம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கனடா | யோர்க் பல்கலைகழகத்தின்  மார்க்கம் வளாக கட்டுமானப்பணிகள் ஆரம்பம். 1
யோர்க் பல்கலைக்கழக மார்க்கம் வளாகம் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

யோர்க் பிராந்தியத்தில் ஒன்டாரியோ அரசாங்கத்தின் பொது உதவி பெறுகின்ற முதல் பல்கலைக்கழக வளாகமாக இது அமைகிறது.

இந்த ஆரம்ப வைபவத்தில் பங்கேற்ற மார்க்ஹம்-தோர்ண்ஹில் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி இது பற்றி கருத்து தெரிவிக்கையில்:   “ நான் கவுன்சிலர் ஆக பணிபுரிந்த  காலத்திலிருந்து இந்த திட்டத்துக்காக உழைத்து வந்திருக்கிறேன். இப்புதிய வளாகத்தின் கட்டுமான பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்படுவது  மிக்க மகிழ்ச்சியை தருகிறது. மார்க்கம், யோர்க் பிராந்தியங்களில் வாழும் மக்கள் இவாறான அதிநவீன வசதிகளை கொண்ட வளாகத்தின் மூலம் உன்னதமான உயர் கல்வி பலன்களை அடைவார்கள் என உறுதியாகக் கூற முடியம்” எனத் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “யோர்க் பல்கலைகழகத்தின் மார்க்கம் வளாகம் 2023 இலையுதிர் காலத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இங்கு இளங்கலை மற்றும் பட்டதாரி மட்டங்களில் தொழில்நுட்பம், வர்த்தகம், தரவு அறிவியல் மற்றும் தொழில்முனைவோர் ஆகிய துறைகளில் பல்கலைக்கழக கற்கையை மேற்கொள்ள விரும்பும் யோர்க் பிராந்திய மாணவர்களுக்கு பல அனுகூலங்களை வழங்கும். கல்வித் திட்டங்களை வேலைவாய்ப்பு கற்றல் வாய்ப்புகளுடன் இணைப்பதன் மூலம், மாணவர்கள் பட்டம் பெறும்போது பணித் தேவைகளுக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்தும். மார்க்கம் வளாகத்தின் கட்டுமானத்தால் 350 மில்லியன் டாலர் பொருளாதார ஊக்குவிப்பும், 2,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.யோர்க் பல்கலைகழக தலைவர் துணைவேந்தர் ரோண்டா எல். லென்டன்,  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அமைச்சர்  ரோஸ் ரோமானோ, யோர்க் பிராந்திய நகராட்சியின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வெய்ன் எம்மர்சன், மார்க்கம் மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி,  மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரும், சிறு வணிக, ஏற்றுமதி மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான அமைச்சருமான மேரி என்ங், கிலா மார்டியோ (தோர்ன்ஹில்), மற்றும் கட்டிடக் கலைஞர் உட்பட, கட்டிட நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email