கனடா: மார்க்கம் நகரில் நடைபெற்ற வாகன விபத்தில் ஒர்ஏ குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளையோர் பலி

தாயார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கனடாவின் தமிழர்கள் செறிந்து வாழும் மார்க்கம் நகரில் நேற்று (12) நடைபெற்ற கோரமான வாகன விபத்தொன்றின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். யாழ்.சுதுமலை/இணுவில் மஞ்சத்தடியைப் பூர்வீகமாகக் கொண்டவர்களும் கனடாவி வசித்து வந்தவர்களுமான புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் பிள்ளிகளான செல்வி நிலா, செல்வன் பாரி ஆகியோரே இவ்விபத்தில் இறந்தவர்களாவார்.

மார்க்கம் நகரில் Markham Rd / Steels சந்திப்பிற்கு வடக்கேயுள்ள Elson தெருவிலிருந்து வந்த வாகனத்தின் மீது சிவப்புத் தெருவிளைக்கை மீறி வேகமாக வந்த பாரவண்டி ஒன்று மோதியதால் வாகனத்தில் பயணம் செய்த இரு இளையோரும் அந்த இடத்திலேயே மரணமானார்கள் எனவும் விபத்தில் படுகாயமடைந்த தாயார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.