Spread the love

கோவிட் -19 நோய்த்தொற்றுக் காரணமாக அதிகரிக்கும் செலவுகளைக் காரணம் காட்டி, கனடாவின் முதியோர்களுக்கு ஒரு தடவை மட்டும் $500 டாலர்களை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

முது வயது ஓய்வூதியம் (Old Age Security -OAS) பெறும் முதியோர்களுக்கு தலா $300 டாலர்களும், உத்தரவாத துணை வருமானம் (Guaranteed Income Supplement) பெறுபவர்கள் மேலதிகமாக $200 டாலர்களையும் பெறுவர் என முதியோர் துறை அமைச்சர் டெப் ஷூல்ட் இன்று தெரிவிதுள்ளார். இப் பணத்துக்கு வரிவிலக்கு விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் 6.7 மில்லியன் முதியோர்கள் உள்ளனர். இவர்களுக்கான இந்தக் கொடுப்பனவுக்காக அரசு $2.5 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

பெரும்பாலான முதியோர்கள் கடைகளுக்குப் போய் பண்டங்களை வாங்கமுடியாதிருப்பதால் அவர்கள் பொருட்களை வீட்டு விநியோக முறைகள் மூலம் பெற்றுக்கொள்வது, மற்றும் வாடகைக் கார் பாவனை ஆகியவற்றின் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட செலவு அதிகரிப்பைச் சமாளிக்க இவ்வுதவித் தொகை வழங்கப்படுகிறதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இவ்வுதவிப் பணத்துக்காக அவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஓய்வூதியம் பெறும் அத்தனை முதியோர்களும் இத் தொகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களாவார்கள் எனத் தெரியவருகிறது.

“கோவிட்-19 நோய்த் தொற்று உருவாக்கியுள்ள இச் சூழலால் முதியோர் உளரீதியாகவும், பண ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்றய அறிவிப்பு அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தைச் சிறிதளவாவது குறைக்கும்” என, இது தொடர்பாகப் பேசிய கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  கனடா | எரின் ஓ'ரூல் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகிறார்!
கனடா | கோவிட்-19 காரணமாக முதியோருக்கு $500 வழங்கப்படும் – மத்திய அரசு

கனடா | கோவிட்-19 காரணமாக முதியோருக்கு $500 வழங்கப்படும் – மத்திய அரசு