கனடா|ஸ்காபரோவில் தமிழ்ப் பெண் கொலை! -

கனடா|ஸ்காபரோவில் தமிழ்ப் பெண் கொலை!

Spread the love
கணவர் சரணடைந்தார்

செப்டம்பர் 12, 2019

கனடா, ஸ்காபரோவில் எல்ஸ்மியர் / கொன்லின்ஸ் சந்திப்புக்கருகில் வசித்துவந்த 27 வயதுடைய தர்ஷிகா ஜெகநாதன் புதனன்று, வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். இவரது கொலையில் சம்பந்தப்பட்டவர் என்ற காரணத்துக்காக 38 வயதுடைய சசிகரன் தனபாலசிங்கம் காவல்துறையால் வழக்குப் பதியப்பட்டுள்ளார்.

தர்ஷிகா ஜெகநாதன்

எல்ஸ்மியர் / கொன்லின்ஸ் சந்திப்பிலுள்ள ஃபிஷெறி வீதியில் மாலை 6:15 மணியளவில் ஒரு ஆண் வாளுடன் ஒரு பெண்ணைத் துரத்திக்கொண்டு ஓடுவதைக் கண்ட பலர் காவல்துறையினருக்கு தொலைபேசியில் தகவல் தந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சசிகரன் தனபாலசிங்கம்

தர்ஷிகா ஜெகநாதன் என்ற 27 வயதுடைய பெண் பலத்த வெட்டுக்காயங்களுடன் அந்த இடத்திலேயே மரணமானார் எனவும் கொலையைச் செய்தவர் எனச் சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய சசிகரன் தனபாலசிங்கம், ரொறோண்டோ காவல்துறையின் 42 பிரிவு அலுவலகத்துக்குத் தன் வாகனத்திலேயே சென்று சரணடைந்தார் எனவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் கணவர் எனவும், தர்ஷிகா அவரிடமிருந்து பிரிந்து வாழ்வதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.

இந்த இருவரையும் நன்கு அறிந்தவர்களுடன் பேச விரும்புவதாக இக் கொலையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  கனடா | சுருண்டு படுக்கும் கஞ்சா வியாபாரிகள்