HealthWorld

கனடாவுக்கு N95 சுவாசக் கவசங்களை விற்பதற்கு ட்றம்ப் தடை விதித்துள்ளார்!

N95 என்ற வகையைச் சேர்ந்த முகவாய்க் கவசங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான 3M, கனடாவுக்கு அவற்றை விற்பனை செய்யக்கூடாது எனத் தடைவிதித்துள்ளார்.

உயர் தரத்திலான இக் கவசங்கள் பொதுவாக சுகாதாரப் பணியாளர்களால் அணியப்படுகிறது. அதி வேகமாகப் பரவும் கோவிட்-19 நோய்த் தொற்றினால் அமெரிக்காவில் சுவாச உபகரணங்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

மினெசோட்டாவில் அமைந்திருக்கும் 3M நிறுவனம், இவ் வகையான மருத்துவ தர முகவாய்க் கவசங்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது. விசேட பாதுகாப்பு அதிகாரங்கள் சட்டத்தைப் பாவித்து, அமெரிக்காவின் தேவைகளை முன்னிறுத்தி, ஜனாதிபதி ட்றம்ப் இத் தடையை விதித்துள்ளார்.

லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு இக் கவசங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என அந் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

“கனடாவிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் உள்ள சுகாதாரப் பணியாளருக்கு இக் கவசங்களைவிற்பனை செய்ய முடியாது என இடப்பட்ட தடையானது, எங்கள் நிறுவனத்திற்கு மனிதாபிமான சங்கடத்தைத் தந்திருக்கிறது என 3M தெரிவித்திருக்கிறது. நாங்களே இந்நாடுகளின் முக்கிய ஏற்றுமதியாளர்கள்” என அவ்வறிக்கை கூறுகிறது.