கனடாவுக்குப் பெற்றோரை அழைத்தல் – அதிர்ஷ்டலாபச் சீட்டு (lottery) முறை விண்ணப்பம் இன்று ஆரம்பம்

கனடாவுக்குப் பெற்றோரை அழைத்தல் – அதிர்ஷ்டலாபச் சீட்டு (lottery) முறை விண்ணப்பம் இன்று ஆரம்பம்

Spread the love

மூன்று வாரங்களுக்குள் இணைய வழியால் விண்ணப்பிக்க வேண்டும்

10,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

கனடாவுக்குத் தமது பெற்றோர்களையோ, பாட்டன் பாட்டிகளையோ ஸ்பொன்சர் மூலம் அழைக்க விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இணையவழி மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். இவ்விண்ணப்பங்களிலிருந்து 10,000 பேர், அதிர்ஷ்டலாப முறையில் (lottery) தெரிவுசெய்யப்படுவார்கள். குடும்ப மீளிணைவுத் திட்டத்தில் அனுமதிக்கப்படும் இவர்கள் கனடாவில் நிரந்தரமாக வசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று மதியம் 12:00 மணிக்கு (ரொறோண்டோ) ஆரம்பமாகும் இத் திட்டம் மூன்று வாரங்களுக்கு மட்டுமே நடைமுறையிலிருக்கும்.

கிடைக்கப்பட்ட விண்ணப்பங்களில் 10,000 பேர்கL, எழுந்தமானமாக (random) செய்யப்படும். அதைத் தொடர்ந்து, தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் முறையான விண்ணப்பங்களைச் செய்ய வேண்டும்.

இந் நடைமுறை இதற்கு முன்னரும் பிரயோகிக்கப்பட்டு வந்தது. கடந்த வருடம் இது மாற்றப்பட்டு, யார் யார் முதலில் விண்ணப்பிக்கிறார்களோ (first-come, first-served) அவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்நடைமுறை ஏகப்பட்ட சிக்கல்களைத் தோற்றுவித்ததால், இந்த வருடம் அதிர்ஷ்டலாப முறைக்கு மாற்றப்பட்டது.

‘முதலில் விண்ணப்பிப்பவர்கள்’ தரிவு செய்யப்படும் நடைமுறையும் இணையவழியாகவே நடிபெற்றது. ஆனால் அது ஆரம்பித்து 10 நிமிடங்களில் இழுத்து மூடப்படவேண்டி ஏற்பட்டுவிட்டது. விண்ணப்ப நிலையங்களில் வரிசையில் நிற்பவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு இடங்களை மாற்றுவது முதல், இணையம் மெதுவாகச் செயற்படுதல், இணையத்தைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள், இயக்கம் குறைந்தவர்கள் எனப் பல சிக்கல்கள் எழுந்தன. இந்நடைமுறை தவறானது என மத்திய அரசுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டன. இறுதியில் வழக்குப் பதிந்தவர்களுக்கு 70 ஸ்பொன்சர் அனுமதிகளைக் கொடுத்து அரசு வழக்குகளைச் சமாளித்துவிட்டது.

அடுத்த வருடத்துக்கான அனுமதி 30,000 என முடிவரவு அமைச்சர் மெண்டிசீனோ தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களைப் பெறுவதற்கான கனடிய குடிவரவுத் திணைக்கள இணைப்பு

Print Friendly, PDF & Email