கனடாவின் இரண்டாவது கொறோனாவைரஸ் நோயாளி, ரொறோண்டோவில்?

Spread the love
சீனாவில் இறந்தோர் தொகை 80 ஆக உயர்வு!

ஜனவரி 27, 2020

ரொறோண்டோவில் மேலுமொரு நோயாளி அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என ஒன்ராறியோ சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். இவர் முதலாவது நோயாளியின் மனைவி எனவும், சமீபத்தில் சீனாவிற்குச் சென்று வந்தவர் எனவும் நம்பப்படுகிறது.

இவருக்கும் நோயறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை. அவர் எங்கு சிகிச்சை பெற்றுவருகிறார் என்பன போன்ற விபரங்களை அதிகாரிகள் அறிவிக்கவில்லை.

முதலாவது நோயாளி (கணவர்) ரொறோண்டோவின் சனிபுறூக் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப்பிரிவில் வைத்துப் பராமரிக்கப்படுகிறார். நேற்று வரை அவரது நிலைமை சீராக இருப்பதாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர் நோய் ஆரம்பித்ததாகக் கருதப்படும் சீனாவின் வூஹான் மாநிலத்திற்குச் சென்றுவிட்டு, ஜனவரி 22 ரொறோண்டோ திரும்பியிருந்தார். 23ம் திகதி, கொறோனாவைரஸ் அறிகுறிகளுடன் சனிபுரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே வேளை, சீனாவில் ஆரம்பித்த கொறோனாவைரஸ் கிருமியின் தாக்குதலால் இறந்தோர் தொகை 80 ஆகவும், நோய் பீடித்தோர் தொகை 2744 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>