கதிர்காமர் கொலை – சந்தேக நபர் மீது ஜேர்மனி வழக்குப் பதிவு
சிறீலங்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பில் ஜேர்மனியில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபரான 40 வயதுடைய ஜி.நவனீதன் என்பவர் மீது ஸ்ருட்காட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுளது.
அத்தோடு, தடை செய்யப்பட்ட வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் மீது இன்னுமொரு வழக்கும் பதிவாகி உள்ளது.
சந்தேக நபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத் துறையில் 2002 முதல் 2009 வரை அங்கத்தவராக இருந்தார் எனவும் 2005 ஆம் ஆண்டு கதிர்காமர் கொலை செய்யப்படுவதற்குத் தேவையான தகவல்களை அவர் பெற்றுக் கொடுத்திருந்தார் என்ற காரணங்களுக்காகவும் இறுதிப் போரின் போது பல விடுதலைப் புலி உறுப்பினர்கள் தப்பியோடுவதற்கு உதவி புரிந்திருந்தார் என்ற காரணங்களுக்காகவும் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என வழக்குத் தொடுநர்கள் தெரிவித்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.