கதிர்காமர் கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை

Spread the love

ஜனவரி 21, 2020

லக்ஸ்மன் கதிர்காமர்

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் 2005 கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கைத் தமிழர் ஒருவர் ஜேர்மனி நீதிமன்றத்தினால் இன்று குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்படுள்ளார்.

கதிர்காமரின் கொலையாளிகளுக்கு அவரது இருப்பிடம் தொடர்பாகத் தகவல்களைக் கொடுத்துதவினார் என நவனீதன் ஜி. என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு ஸ்டுட்கார்ட் நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் அவர் குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்டார்.

இக்குற்றத்திற்காக அவருக்கு 6 வருடங்களும் 10 மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என ஜெர்மனியின் செய்தி ஸ்தாபனமான டி.பி.ஏ. தெரிவித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட நவனீதன் விடுதலைப் புலிகளின் உளவுத்துறையில் அங்கத்தவராக இருந்தார் எனவும் 2012 இல் அவர் ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார் எனவும் வழக்குத் தொடுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜெர்மனியில் தஞ்சம் கோரும்போது கொடுத்த வாக்குமூலத்தில் “லக்ஸ்மன் கதிர்காமரின் கொலை விடயத்தில் அவர் இருப்பிடம் பற்றித் தான் விடுதலைப் புலிகளுக்குத் தெரிவித்ததாக ஒப்புக்கொண்டிருந்தார் எனவும் பின்னர் அது தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது என நீதிமன்றத்தில் கூறியிருந்தார் எனவும் டி.பி.ஏ. தெரிவித்திருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>