கடிகாரப் பெருமக்களுக்கோர் நற்செய்தி.... -

கடிகாரப் பெருமக்களுக்கோர் நற்செய்தி….

நீங்கள் மது அருந்துபவரா? இச் செய்தி உங்களுக்கு மட்டும்தான்.

‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ அப்படியெல்லாம் இனிப் பாட முடியாது. LCBO, தவறணை, டாஸ்மார்க் அப்படியெல்லாம் அலையத் தேவையில்லை. போத்தலை வாங்கிவந்து, அதற்குக் கலக்குவதற்கு ஷாண்டி, வார்ப்பதற்குக் கிளாஸ்கள் என்றெல்லாம் இனிமேல் ஓடத் தேவையில்லை. மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ (சமத்துவத்தையும் கொஞ்சம் கவனிக்க வேணும்) தெரியாமல் தண்ணியை வாய்க்குள் போட்டுக் கடித்து விழுங்கி விடலாம். சரக்கு இனி உங்கள் பைகளுக்குள் அடக்கம். ‘இந்தக் கடிகாரனைக் / கடிகாரியைக் கட்டி நான் படும் பாடு என்று இனி வருங்காலங்களில் பேச்சுப்பிழைகளுடன் வசைபட்டுவதைக் கேட்கத் தயாராயின், தொடர்ந்து வாசியுங்கள்.

‘கிளென்லிவெற்’ என்ற நமது பிரபல சிங்கிள் மோல்ட் விஸ்கி நிறுவனம் ருவீட் செய்திருக்கிறது. அதாவது கிளாஸ் இல்லாத, ஐஸ் இல்லாத, கலக்கி இல்லாத விஸ்கியை கப்சியூல்களில் அடைத்தபடி நீங்கள் வாங்கலாம். மறைத்து வைப்பதற்கும் ஈசி.

லண்டனில் விரைவில் நடக்கவிருக்கும் ‘லண்டன் கொக்ரெயில் வீக்’ எனப்படும் நிகழ்வில் இது அறிமுகமாகவிருக்கிறது. வாங்கிக் கடித்துண்டு மகிழுங்கள்!

கடித்துண்டு வாழ்வாரே வாழ்வார் ….

தலைப்பில் எழுத்துப் பிழையில்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

யாழ்ப்பாணத்தில் கள்ளுக் கட்டிகள் தூங்கும் கள்ளுக் கொட்டில்களை நினைக்க வாயூறுகிறதா?

கடி குடி சொற்கேளாது…

-கடிப்பெருமகன்

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error0
error

Enjoy this blog? Please spread the word :)