கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்படும் – த.நாடு அரசு

Spread the love

வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு திரும்பும் பயணிகளும் அவர்கள் வதியும் வீட்டுவாசிகளும் தம்மைக் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும், மீறும் பயணிகளின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டவர்கள் அக் கட்டளையை மீறாமலிருப்பதற்காகத் தமிழ்நாடு அரசு பலவிதமான நடவடிக்கைகளை எடுக்கிறது. மீறுபவர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யும் திட்டம் அதிலொன்று.


இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அனுப்பிய ருவீட் செய்தியில், ” எப்படிக் கண்காணித்தாலும், சில பயணிகள் கட்டளையை மீறி வெளியே செல்வதால் நோயின் சமூகப்பரவலுக்குக் காரணமாகிவிடுகிறார்கள். இதனால், இப் பயணிகளிந் பெயர்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், காவல்துறையினரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. இக்கட்டலையை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களது கடவுச்சீட்டுக்களும் பறிமுதல் செய்யப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில், தற்போது, 9,424 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு, பெருநகர சென்னை மாநகராட்சி மன்றம் தனது அதிகாரத்துக்குள் வரும் தனிமைப்படுத்தப்பட்டோர் வீடுகளின் கதவுகளில் பச்சை சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளது. ஏறத்தாழ 3000 வீடுகளில் இப்படியான பயணிகள் தங்கியிருப்பதாக அது தெரிவிக்கிறது.

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பெயர்கள், விலாசம், எண்ணிக்கை, கால அவகாசம் என்பன அச் சுவரொட்டியில் இருக்கும்.


“நோய்த்தொற்று உள்ளவர்களெனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் வதியும் வீடுகளின் கதவுகளில் மேற்படி அறிவித்தல்கள் ஒட்டப்படுவதன் மூலம் ஏனையோர் சமூக விலக்கை மேற்கொள்ள வசதியாகவிருக்கும். இப்படியானதொரு அவசர நிலைமையில் இந் நடவடிக்கை பெருமனதுடன் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்று” என சென்னை மாநகராட்சிமன்ற ஆணையாளர் திங்களன்று தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email
Related:  இந்தியாவும் பயணத்தடையை அறிவித்தது | உலக சுகாதார நிறுவன அறிவிப்பின் எதிரொலி!

Leave a Reply

>/center>