கடனில் மூழ்கும் இலங்கை | ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு திசைகளில்!

Spread the love

ஜனவரி 22, 2020

வேறு திசைகளில் பயணிக்கும் ஜனாதிபதியும் பிரதமரும்

கடன் சுமையில் நாட்டின் பொருளாதாரம் அமிழ்ந்துகொண்டிருக்கையில், ஜனாதிபதியும், பிரதமரும் வெவ்வேறு நிர்வாகப் பாதைகளில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் எனவும், அரசாங்கம் இரு வேறு முகாம்களாகப் பிரிந்திருக்கிறது என்றும், ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஊடகவியாளருடன் பேசும்போது தெரிவித்தார்.

“பொருளாதார நிர்வாகம் பிழைத்துப்போனதால் மேலும் கடன்களைப் பெறமுடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. இதற்குள், ஜனவரி 31ம் திகதி அடுத்த கடன் கொடுப்பனவு வருகிறது” என விதானகே மேலும் தெரிவித்தார்.

2020 ம் ஆண்டுக்கு மட்டும், இலங்கை அரசின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகள் USD 4.8 பில்லியனாகும். இதில் முதல் அரையாண்டுக்கான கொடுப்பனவுகள் நிறைவுசெய்யப்பட்டிருக்கிறதென்றும் மேலும் குறிப்பிட்ட அளவு பணம் தேவைப்படுகிறதெனவௌம் மத்திய வங்கியின் உதவி ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்ததாக ‘றிப்பப்ளிக் நெக்ஸ்ட்’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.


நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்புற்றிருக்கும் நிலையில், கடனையோ அல்லது வட்டியையோ திருப்பிக் கொடுக்கவல்ல திட்டங்கள் எதுவுமில்லாது அரசாங்கம் இருக்கிறது. இதனால் மேலும் கடன்களைத் தருவதற்கு வங்கிகள் மறுப்பதற்கான சந்தர்ப்பங்களுமுண்டு.

இன் நிலையில், நாட்டு மக்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் சமுர்த்தி உதவிப்பணத்தை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அத்தோடு, வேறு பல அரச துறைகளின் சம்பளங்களும் நிறுத்தப்படும் ஆபத்துக்களுமுண்டு என அவர் தெரிவித்தார்.

“மக்களிடம் ஐக்கிய தேசியக் கட்சி மீதான வெறுப்பை அதிகரிக்கும் நோக்கில் அரசியற் காரணங்களுக்காக தற்போதிய அரசு அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பு (VAT), மற்றும் இதர சலுகைகள் மூலம், வருமானத்தில் ரூ. 538 பில்லியன் துண்டு விழுந்திருக்கிறது” என விதானகே தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  சுனில் ரத்நாயக்கா விவகாரம்: ஜனாதிபதி சட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை

Leave a Reply

>/center>