ஓய்வு பெற்ற பின்பும் சிறிசேன தன் மாளிகையிலேயே தொடர்ந்தும் வசிக்கலாம் – அமைச்சரவை

Spread the love

அக்டோபர் 29, 2019

ஜனாதிபதியின் உயிராபத்து காரணமாம்

ஓய்வு பெற்றதன் பின்னரும் ஜனாதிபதி சிறீசேன கொழும்பு-7 இலுள்ள தனது மாளிகையிலேயே தொடர்ந்தும் வசிக்கலாமென அமைச்சரவை முடிவெடுத்திருக்கிறது. அவர் ஜனாதிபதியாகவிருந்தபோது எடுத்த சில நடவடிக்கைகளின் பலனாக அவர் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற விசேட சூழ்நிலை காரணமாகவே அவருக்கு இச் சலுகை செய்யப்படுகிறது என அமைச்சரவை கூறுகிறது.

ஜனாதிபதி ஓய்வுப் பொதியில் 8,000 மில்லியன் ரூபாய்கள் – ஜே.வி.பி. பா.உ. விஜித ஹேரத்

இத் தீர்மானம், உச்சநீதிமன்றத்தின் தீர்மானம் (SC FR503/2005) இற்கு முரணானதாக இருந்தாலும் சிறீசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர் நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பல துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்திருந்தாரெனவும் இதன் காரணமாக பாதாள உலகில் பல எதிரிகளைச் சம்பாதித்திருக்கிறார் எனவும் நம்பப்படுகிறது.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பயங்கரவாதம், போதைவஸ்து கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மூலம் ஜானாதிபதிக்கு உயிராபத்து ஏற்படலாமென அமைச்சரவை கருதுகிறபடியால் அவர் ஒவு பெறும்போது அவருக்கு விசேட ஓய்வுப் பொதியொன்றை வழங்குவதற்கு அது தீர்மானித்துள்ளது. அத்தோடு ஜனாதிபதியின் எதிர்காலச் செலவுகளுக்காக 8 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் இடைக்கால உத்தரவின் மூலமாக மேலதிகமாக 2 பில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளதாகவும் ஜே.வி.பி. பா.உ. விஜித ஹேரத் குற்றம்சாட்டியுள்ளார்.


ஜனாதிபதியின் விசேட ஒய்வுப் பொதி பற்றிய பிரேரணை அமைச்சர் மங்கள சமரவீரவினால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஒவு பெற்றதன் பின்னர் ஜனாதிபதி கொழும்பு 7 இலுள்ள அவரது வசிப்பிடத்தில் தொடர்ந்து வாழமுடியும் என்பதோடு அவரது பாதுகாப்பிற்காக விசேட படையொன்றை வழங்கல், அலுவலக வாகனங்கள், எரிபொருள், நீர், மின்சாரம், தொலைபேசி ஆகிய – முன்னாள் ஜனதிபதிகளுக்கு வழங்கும் சகல சலுகைகளுக்கும் -அவர் உரித்துடையவர் என அப்பிரேரணை கேட்டுக்கொள்கிறது.

ஒய்வு மெறும்போது ஜனாதிபதி சிறிசேன மாத சம்பளமாக 97,500 ரூபாய்களையும் பெறுவார். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரும் இதே அளவு சம்பளத்தையே பெறுகிறார்கள்.

Print Friendly, PDF & Email
Related:  சுனில் ரத்நாயக்கா விவகாரம்: ஜனாதிபதி சட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை
>/center>