ஓசெம்பிக்: கண் பார்வையைப் பாதிக்கிறதா?
மருந்து நிறுவனங்கள் மீது பெருந்தொகையானோர் கூட்டு வழக்கு
இரத்த சர்க்கரையைக் குறைக்கவும் உடல் பருமனைக் குறைக்கவுமென உலகில் பெருந்தொகையான மக்கள் உள்ளெடுக்கும் ஓசெம்பிக் என்ற மருந்தின் பக்க விளைவாக பலர் பார்வைக் குறைபாடு அல்லது முற்றான பார்வையிழப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் எனவும் இவர்களில் பலர் கூட்டாகச் சேர்ந்து ஒஸெம்பிக் மருந்து தயாரிப்பு / விநியோக நிறுவனங்களான ‘நோவோ நோர்டிஸ்க்’ (Novo Nordisk) மற்றும் எலி லிலி (Eli Lilly) ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவின் மத்திய சட்டத்தின் கீழ், பிலெடெல்ஃபியா மத்திய நீதிமன்றத்தில் வழக்கொன்று பதிவாகியுள்ளது.
இதே வேளை இம்மருந்தின் இன்னுமொரு பக்க விளைவாக வயிறு மற்றும் சிறுகுடல் வியாதிகள் உண்டாகின்றன எனக்கூறி இதே நீதிமன்றத்தில் இன்னுமொரு வழக்கொன்றும் பதிவாகியுள்ளது.
ஓசெம்பிக், வீகோவி, சக்ஸெண்டா ஆகிய மருந்துகள் நோவோ நோர்டிஸ்க் நிறுவனத்தாலும், ட்றுளிசிட்டி என்னும் மருந்து எலி லிலி நிறுவனத்தாலும் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இம்மருந்துகளை எடுப்பவர்களின் கண்களில் பார்வை நரம்புகளுக்கு வழங்கப்படும் இரத்தக்குழாய்களில் இரத்தம் தடைபட்டுப் போகலாமெனவும் இதனால் பார்வை குறைபாடுடைந்தோ அல்லது முற்றாகக் குருடாகிவிடவோ முடியுமெனவும் நிபுணர்கள் நம்புகிரார்கள். ஓசெம்பிக் போன்ற ஊசி மூலம் ஏற்றப்படும் GLP-1 ரக மருந்துகள் ஏற்படுத்தும் ஓர்மோன் மாற்றங்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரையைக் குறைப்பதோடு எடுப்பவரின் பசியையும் குறைத்துவிடுகிறது. Type 2 நீரிழிவு மற்றும் உடற் பருமன் அதிகமானவர்களுக்கு அவர்களது மருத்துவர்களால் இம்மருந்து பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
பார்வை நரம்பு பாதிப்பு சம்பந்தமாக இதுவரை 30 வழக்குகள் மத்திய நீதிமன்றத்திலும் 40 ற்கும் மேற்பட்ட வழக்குகள் மாநில நீதிமன்றங்களிலும் இதுவரை பதிவாகியுள்ளன. இம்மருந்துகளினால இரைப்பை அழற்சி (gastroparesis) ஏற்பட்டுள்ள்தெனக் கூறி 3,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜூலை 2024 இல் இமமருந்துகளின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வறிக்கை வெளியாகியதைத் தொடர்ந்து இப்படியான வழக்குகள் பதிவாகி வருகின்றன. (Image Credit:Photo by Sweet Life on Unsplash)
